கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி சச்சினின் 99 சதங்களை பற்றி ஒரு தொடர் பதிவு இடுவது என்று ஏதோ ஒரு ஆர்வத்தில்

 என்று பதிவிடத் தொடங்கினேன். ஆனால் வெறும் ஏழு பதிவுகளுடன் அது நின்று போய் விட்டது.

சச்சின் நூறாவது சதத்தை அடிக்காமல் இருப்பதற்கும் இந்த தொடர் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நூறு சதவிகிதம் தெரிந்து இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை வருடுவதால் கிடப்பில் போட்ட அந்த தொடரை பெயர் மாற்றத்துடன் தொடரப் போகிறேன்.

இந்த பதிவு முதல் தலைப்பு

100 நாட் அவுட்.!

 

சதம் #9ரன்கள் : 115

எதிரணி : நியூசிலாந்து

இடம் : பரோடா, இந்தியா

நாள் : அக்டோபர் 28, 1994

ஆட்ட முடிவு : வெற்றி

ஆட்ட நாயகன் : ஆம்

 சிறிய பரோடா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே எப்போதும் இருந்து இருக்கிறது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் இரண்டே பேர் மட்டுமே அணியின் மொத்த ஸ்கோர் வர காரணமாய் இருந்தனர்.

 ஸ்ரீநாத், பிரபாகரின் வீச்சில் தொடக்கக் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப திணறிய நியூசிலாந்து அணியில் ருதர்போர்ட் சதமடிக்க பரோரே பவுண்டரிகளே இல்லாமல் 96 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் வெற்றி இலக்கு 270 ரன்கள்.

தொடக்கம் முதலே சச்சினும் பிரபாகரும் அடித்து ஆடினார்கள்.

முதல் விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த பின் பிரபாகர் (74) ஆட்டம் இழந்தார்.

 

சச்சின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார்.இதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

அசாருதீன் அடித்த பந்து பவுலர் கையில் பட்டு ஸ்டம்பில் அடிக்க எதிர்ப்பக்கம் இருந்த சச்சின் ரன் அவுட் ஆனார். ஆனால் அதற்கு முன்பே வெற்றி கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

ஆட்ட நாயகனாக சச்சின் தெரிவானார். 

 சச்சினின் ஆட்டத் தொகுப்பு காணொளி கீழே… 

                       

0 Shares:
3 comments
  1. முன் எப்போதும் எந்த சாதனைக்கும் சச்சின் இவ்வளவு காலம் எடுத்ததில்லை. இந்திய அணியின் தொடர் தோல்விகளால் வீரர்கள் அனைவருமே சோர்ந்து விட்டனர்.
    சச்சினின் நூறாவது சதம் அனைவரையும் புத்துணர்வு கொள்ளச் செய்யும் என நம்புவோம்,

Leave a Reply
You May Also Like
Read More

99 நாட் அவுட்.! (5)

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில்…
Read More

99 நாட் அவுட்.! (4)

சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம்,…
Read More

99 நாட் அவுட்.! (7)

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமாக ஒரு இடத்தை கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சில மாதங்களில் பெற்று விட்டார். ஆனால் ஒரு தின போட்டிகளை பொறுத்தவரை…
Read More

99 நாட் அவுட்.! (3)

பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும்…
Read More

99 நாட் அவுட்.! (2)

நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம். இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம். நம்ம…
Read More

99 நாட் அவுட் (6)

சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்.. இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது…