சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்..
இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது சதம் பற்றி பார்க்கப் போகிறோம்.
இதுவும் இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்டது தான், ஆனால் போன சதம் இலங்கையில் வந்தது, இது இந்திய மண்ணில் பதிக்கப்பட்டது.

சதம் #7

ரன்கள் : 142
எதிரணி : இலங்கை
இடம் : லக்னோ
நாள் : ஜனவரி 19,1994 
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : இல்லை / அனில் கும்ப்ளே

இந்த சதத்தினை பதிவு செய்ததன் மூலம் தொடர்ச்சியாக தான் சதமடித்த   மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதற்கு நிச்சயம் சச்சின் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் சில மணித்துளிகள் விக்கிரமசிங்க பந்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் திணறிக் கொண்டு இருந்தனர். ஆனால் எல்லாம் சச்சின் களமிறங்கியதும் மாறிப் போனது. சித்துவுடன் சேர்ந்து நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இதில் சித்துவின் ஆட்டம் முரளிதரனுக்கு எதிராக வெறி ஆட்டமாய் இருந்தது. அவர் மொத்தம் எட்டு சிக்ஸர்கள் விளாசினார். இன்னும் இரண்டு அடித்து இருந்தால் அப்போதைய உலக சாதனையாக அது மாறி இருக்கும். ஆனால் யார் பந்தில் அதிகம் அடித்தாரோ அவர் பந்திலேயே அவர் அவுட் ஆகிப் போனார்.

சச்சினுக்கு இந்த தாம் தூம் என்று ரன்களை குவித்து விட்டு பின்பு அணியை அம்பேல் என்று விட்டு விட்டு போகும் பழக்கம் அப்போதெல்லாம் இருந்திருக்கவில்லை. அவர் என்றைக்குமே நேர்த்தியான தட்டி தட்டி விளையாடுவதில் சிறப்பானவர் என்பதை இந்த போட்டி மூலம் இன்னொருமுறை நிரூபித்தார்.

தான் எடுத்த 142 ரன்களில் 88 ரன்களை பவுண்டரிகள் மூலம் திரட்டினார். அதுவும் அதில் பெறும் பகுதி ஆப்-சைட் திசையில் அடிக்கப்பட்டு வந்தவை. சச்சினின் களத்தடுப்பு வீரர்களை ஏமாற்றி ரன் அடிக்கும் நேர்த்தி அவருக்கு மட்டுமே உரித்தானது.

சித்து அவுட் ஆன பிறகு, அசாருதீன் உடன் சேர்ந்து மீண்டும் ஒரு நூறு பார்ட்னர்ஷிப் மூலம் அணியை வலுவான நிலைக்கு இட்டு சென்றார்.
பிறகு வந்த மிடில் ஆர்டர் வீரர்களும் தங்கள் பங்குக்கு ரன் சேர்க்க இந்தியா 511 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் ஓரளவு சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியை தன் சுழலில் சிக்க வைத்து கும்ப்ளே இந்தியாவிற்கு இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்று தந்தார். அவர் இந்த போட்டியில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

காணொளி : 

இந்த சதத்திற்கான காணொளி கிடைக்கப்பெறவில்லை, அதனால் சச்சினின் இந்த அதிரடி துவம்சத்தை பதிவேற்றி இருக்கிறேன் மன்னித்து அருளவும்.
உங்களுக்கு காணொளி கிடைப்பின் மறுமொழியில் தெரிவிக்கவும். 

                            

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்… 

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

99 நாட் அவுட்.! (5)

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில்…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

99 நாட் அவுட்.! (4)

சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம்,…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…