wedding தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பொதுவாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.இந்தச் சித்திரையில் பிள்ளைப் பிறந்தால் வெப்பத்தின் தாக்குதல் குழந்தையைப் பாதிக்கும் என்பதால் தான் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு தடா போட்டு பிரித்து வைத்தார்கள்.
ஆனால் ஆடி மாதம் ஒரு அற்புதமான மாதம். குல தெய்வ வழிபாடு நடத்துவதற்காகவே இருக்கின்ற மாதம் . பெரிய நகரங்களில் வாழ்பவர்கள் கூட ஆடிமாதம் என்றால் எவ்வளவு தூரமாக இருந்தாலும் எத்தனை பணிச்சுமை இருந்தாலும் பேருந்து போகாத குக்கிராமமாக இருந்தாலும் தன் முன்னோர்கள் வழிபட்ட குல தெய்வத்தை சென்று வழிபடுவார்கள். இந்த சித்திரை மாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறும். வெப்பம் மிகுந்த இந்தகாலத்தில் வைரஸ் கிருமியினால் ஏற்படும் அம்மைத் தொற்று அதிகம். அந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.

அதனால் தான் தமிழ் மக்கள் வேப்பிலை மரத்தை தெய்வமாக வழிபட்டனர். கூழ்வார்க்கும் திருவிழாவின்போது வேப்பிலையினால் தோரணங்கள் கட்டியதுடன் அம்மை நோய்க் கண்டவர் இருப்பவர் வீட்டில் வேப்பிலையைச் சொருகியும் வைத்தார்கள். கேழ்வரகு தானியம் அதிக நார்ச்சத்து மிகுந்த உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்ற நல்ல சத்தான தானியம் என்பதால் வெயில் அதிகமான இந்த நாட்களில் கேழ்வரகினால் கூழ் செய்து அம்மனுக்கு படைத்து அதனை ஏழை எளியோருக்கு ஊற்றினார்கள்.

இப்படியும் சொல்றாங்கpuraanam
       ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில் குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில் பிறந்ததாக இருக்கும்.மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு,அது சூரியனுக்கு உச்சவீடு.எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம் வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும் இருப்பான்,அதிலும் அதிகாலையில் பிறந்து லக்னமும் அதுவாக அடையப்பெற்றவனாயின் அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு.

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்பதற்காகவே மன்னர்களின் காலத்தில் ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப் பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

0 Shares:
Leave a Reply
You May Also Like

13 வகை சாபங்கள்

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!.. 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம…
Read More

சித்திரை மாதத்தின் சிறப்பு

    இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம்…
Read More

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்;மதுரை மாவட்டத்தில் போலீசார் குவிப்பு

மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார்…
Read More

ஏன் சிவராத்திரி ? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளர்த்தங்கள்

சிவராத்திரி என்பது விழா அல்ல! அது,மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம்.   அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.…
Read More

எப்படி 2 : கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) விண்ணப்பித்து பெறுதல்

உலகம் முன்பை விட இப்போதெல்லாம் மிகவும் சுருங்கி விட்டது. வேலை,படிப்பு என்று பல காரணங்களால் நாம் இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.…
Read More

எப்படி 3 : இணைய இணைப்பை எளிதாக மற்ற கணினியுடன் பகிர்தல்

ஒரே இணைய இணைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பினும். WiFi மூலம் நமது இணைப்பை பகிர்வது எல்லாவற்றிலும் மிக எளிது. இதன்…