நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…

 

தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.
அதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.மேலும் படிக்க

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

கபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க

ரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக…
Read More

கபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்

கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு…
Read More

மனிதன் (2016) பாடல்கள் வெளியீடு

ரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம்,…

தெறி–கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய், அட்லி

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி.…
Read More

கபாலி படங்கள்

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கபாலி திரைப்படத்தை பா. ரஞ்சித் உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடிக்கின்றார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர்…
Read More

ரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது

கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக…