விஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் நடிப்பில் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில்( 50-வது படம் ), ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் தெறி தேறி விடுமா?

நேர்மையான ஐ .பி.எஸ். ஆபிஸர் விஜய்! அவரது போலீஸ் லிமிட்டில் உள்ள ஏரியா பெரிய மனிதர் ‘உதிரி பூக்கள்’ மகேந்திரன். அவரது மகனின் அட்டகாசமும், அயோக்கியத்தனமும் பொறுக்காமல் ஆக் ஷனில் இறங்குகிறார் விTheri-vijay (21)ஜய்! அப்பா வும், பிள்ளையும் எப்படி எல்லாம் விஜய்யை எதிர்க்கின்றனர்.? அவர்களை விஜய் எப்படி அதிரடியாய் சமாளிக்கிறார்…? எனும் ஆக் ஷன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ். அல்லாது, ஜோசப் குருவில்லா, தர்மேஷ்வர் என இன்னும் இரண்டு விஜய்கள்.. சமந்தா, எமி ஜாக்ஸன், பேபிநைனிகா இருக்காங்களே அவர்களுக்காக செண்டிமெண்ட், காதல், பாசம். முழு சாப்
பாடு கட்ட முயற்சித்து இருக்கிறார் அட்லீ.

கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல்.

Theri-vijay (22)
ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள்.

இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட விஜய் போக வேண்டியிருக்கிறது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். இதனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார்.

இருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வை பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார். அந்த போலீஸ்காரர் சொன்ன பெயரை வைத்து இணையதளத்தில் தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.

இதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் விரிகிறது. விஜய் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், விஜய்யின் நேர்மையான குணம் தெரிந்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். பின்னர், விஜய்யும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.

Vijay in Theri Movie Stills
Vijay in Theri Movie Stills

இந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.

குற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும் அவனை கைது செய்ய நேரடியாக அவர் வீட்டுக்கு போகிறார். ஆனால், அவர்களோ தங்களுடைய

Vijay in Theri Movie Stills
Vijay in Theri Movie Stills

மகன் இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மொட்டை ராஜேந்திரன் இதுவெல்லாம் பெரிய இடத்து பிரச்சினை, எப்படியும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த தருணத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி தரும்படியான ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.

அது என்ன? அந்த குற்றவாளி கிடைத்தானா? விஜய்-க்கு அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்? விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறியுடன் விவரித்திருக்கிறார்கள்.

முதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய் அறிமுகம் ஆகும் காட்சியில் தொடங்கி, அவர் ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீசுக்குண்டான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

தன்னுடைய பங்குக்கு எந்தளவுக்கு இந்த படத்தில் ஸ்டைலாக நடிக்க முடியுமோ? அந்தளவுக்கு ஸ்டைலாக நடித்துக் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும். மேலும், விஜய், சுவிங்கத்தை கையில்வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சிதரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.

மேலும், இந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் குழந்தை நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ? அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நைனிகாவுக்கும் விஜய்க்கும் உண்டான பாசத்தை இதில் அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.

Vijay in Theri Movie Stills
Vijay in Theri Movie Stills

எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லி. ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் குழந்தை மாதிரியான நடிப்பு இவரிடம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் அட்லி.

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன், மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார். சமந்தா அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.

அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் விஜய்யும், அவரது ஆசை மகளாக வரும் நைனிகாவும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். சமந்தா டாக்டராக நடித்திருக்கிறார், சொந்த குரலில் பேசும் மூன்றாவது படம், அவர் பேசிய முதல் இரண்டு படங்கள் அஞ்சான், பத்து என்றதுக்குள்ள ப்ளாப் ஆனதால் அம்மணி இனி சொந்த குரலில் பேசுவாரா என்பது இந்த படத்தின் முடிவில் தான் இருக்கிறது . அவரது காஸ்ட்யூம்கள் கச்சிதம். நைனிகாவின் மலையாளி ஆசிரியையாக வரும் எமி ஜாக்ஸன் வர்ற காட்சி எல்லாம் விளம்பரம் மாதிரி அழகா வந்திருக்கு.

சாவு நமக்கு நடக்கறப்போ வலிக்கிறது தெரியாது… நம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடக்கிறப்போ, நமக்கு எப்படி வலிக்கும் தெரியுமா? என்று பன்ச் பேசியபடி மகனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை நிற்கும் மகேந்திரன்,நடிப்பில் ஒரு வலம் வரலாம்.

பிரபு, ராதிகா, அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட கேரக்டர்களும் படத்தில் இருக்கு. ராஜேந்திரன் தன்னை வடிவேலுவுக்கு மாற்றாக அழைத்ததை உணர்ந்து செண்டிமெண்ட், காமெடி என இரண்டையும் தர முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் நல்லா கிச்சு மூட்டினாதான் கொஞ்சமாவது வாய்விட்டு சிரிக்கலாம். வடிவேலு அண்ணே நீங்க எப்போ வருவீங்க?

படத்தின் பாடல்கள் ‘செல்லக்குட்டி …’, ‘ஜித்து ஜில்லாடி ..’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டோ ஹிட் அதிலும் ‘ஈனா.. மீனாடீக்கா…’ பாடல் ரசனையின் உச்சக்கட்டம்!

படத்தின் கதையும் சரி, படம் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி… நாம் பார்த்து பழகிய ஒன்று தான் …

விஜய் மாதிரி மாஸ் ஹீரோவை மீண்டும் ஒரு இயக்குனர் வச்சி செஞ்சிட்டார் அப்படின்னு வதந்திகள் வந்தால் கொஞ்சம் நம்பித்தான் ஆகணும்ங்க, சமீபத்தில் வெளியான போலீஸ் படமான சேதுபதி ஏற்படுத்திய ஒரு தாக்கம் இதில் மிஸ்ஸிங்.

 

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…   தெலுங்கில்…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…