சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமாக ஒரு இடத்தை கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சில மாதங்களில் பெற்று விட்டார். ஆனால் ஒரு தின போட்டிகளை பொறுத்தவரை நிலைமை அப்படி இருந்திருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக 82 ரன் குவித்த அந்த ஒரே போட்டி அவரை ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரர் ஆக்கியது. இப்போது (20/05/2011) சச்சின் 48 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் தனது முதல் சதத்தை அடிக்க அவர் 79 போட்டிகள் கடக்க வேண்டி இருந்தது.

சதம் #8

ரன்கள் : 110
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : கொழும்பு,இலங்கை
நாள் : செப்டம்பர் 9, 1994
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்

சச்சின் எப்போதுமே ஆஸ்திரேலியா அணி என்றாலே புது உத்வேகத்துடன் விளையாடுவார். இந்த போட்டிக்கு சில ஆட்டங்களுக்கு முன்பு தான் சச்சின் தொடக்க வரிசை வீரராக களம் கண்டார்.

சச்சின் மனோஜ் பிரபாகர் உடன் களமிறங்கினார். மெக்ராத்,வார்னே என சச்சினின் திறமைக்கு சவால் விடும் வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா அணியின் பந்துகளை தனது திறமை மூலம் ஒடுக்கினார்.

குறிப்பாக மெக்ராத் பந்து வீச்சு சச்சினிடம் சுத்தமாக எடுபடவில்லை. முதல் சில ஓவர்களிலேயே அவர் பந்து வீசுவதை நிறுத்திக் கொண்டார்.நிறுத்தப்பட்டார். ஆனால் நிஜமான போட்டி அதன் பிறகு தான் இருந்தது. ஷேன் வார்னே வீசிய ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தன் ஆதிக்கத்தை வார்னே மீது செலுத்த தொடங்கினார், இன்று வரை அது தொடர்கிறது. வார்னேவும் பல முறை சச்சினை தன் சிறப்பான பந்துகளால் வீழ்த்தி இருக்கிறார்.

சச்சின் தனது ஐம்பது ரன்களை 43 பந்துகளுக்கெல்லாம் எடுத்திருந்தார். மொத்தம் எட்டு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் சதம் அடித்தார். சச்சினின் சதம் தான் இந்தியா 247 ரன் என்னும் கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியது.(1994 இல் இதுவே அதிகமுங்க )

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் எவரையும் அதிகம் நிலைக்க விடாமல் பார்த்துக் கொண்டதில் இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றனர். ஆனால் அதிலும் மார்க் வாக் மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி அரை சதம் அடித்தார். அந்த அணியின் எவரும் சிக்ஸர் அடிக்கவில்லை.

மனோஜ் பிரபாகர் மூன்று விக்கெட்டுகள்,இரண்டு கேட்ச்,இரண்டு ரன்-அவுட் என்று அதிசிறப்பாக விளையாடினார். ஆனாலும் சச்சினின் சதம் தான் கடைசியில் ஆட்ட நாயகன் விருதுக்கு அடி கோலியது.

காணொளி : 

அட  என்னங்க இது இந்த போட்டிக்கான காணொளியும் எனக்கு கிடைக்கவில்லை..
அதனால் சச்சின் அதே ஆண்டில் சச்சின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 73  ரன்கள் அடித்த இந்த போட்டியின் காணொளியை பகிர்ந்து உள்ளேன்.

                           
பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்… 

0 Shares:
2 comments
Leave a Reply
You May Also Like
Read More

99 நாட் அவுட்.! (4)

சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம்,…
Read More

99 நாட் அவுட்.! (3)

பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும்…
Read More

99 நாட் அவுட்.! (2)

நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம். இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம். நம்ம…
Read More

99 நாட் அவுட்.! (5)

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில்…
Read More

சச்சினுக்கு இன்னொரு மகுடம்..!

கடந்த ஓராண்டில் சச்சின் தன் 20 வருட கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட்டார். ஒரு தின போட்டிகளில் கனவாக இருந்த 200 ரன்களை…
Read More

99 நாட் அவுட் (6)

சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்.. இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது…