சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?’ என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

 மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, இந்தி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்துவது போல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை துவங்க உத்தரவிடக் கோரி, லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், நீதிபதி கிருபாகரன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:

மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், உலக தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல், செம்மொழி எனக் கூறிக் கொள்வதால் என்ன பயன்? தொன்மையான மொழி தமிழ்.

கடந்த, 2,200 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டிய மன்னர்கள், மூன்று சங்கங் களை அமைத்து, தமிழை வளர்த்தனர்.
தமிழ் மொழியைப் பற்றி, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மேடிசன் பல்கலை சமஸ்கிருத பேராசிரியர் ஜார்ஜ் ஹர்ட், கலிபோர்னியா பல்கலை தமிழ் பேராசிரியர் பெர்கெலே, செக்கஸ்லோவியா பேராசிரியர் கமில் வக்லாவ்பழமையான தமிழ் கையெழுத்து

‘பிரதிகள், ,யுனெஸ்கோ’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகள், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும், தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ், இந்தோனேஷியா, பிஜி, தென் ஆப்ரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி பரவியுள்ளது.

இந்நாடுகளில் உள்ள தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் மொழியை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவில்லை.
திருக்குறளை லத்தின் மொழியில் மொழி பெயர்த்த வீரமாமுனிவர் உள்ளிட்டோர், தமிழின் தொன்மையையும், பெருமைகளையும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்தியாவில் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ். எனவே, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் அளித்த கருத்துருவின் மீது நடவடிக்கை எடுத்து, அஞ்சல் வழி தமிழ் வகுப்புகளை நடத்த, 37.36 லட்சம் ரூபாயை விடுவிக்க வேண்டும். அதன்பின், குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழி வகுப்புகளை துவங்க வேண்டும்.இவ்வாறு, ‘டிவிஷன் பெஞ்ச்’ தீர்ப்பளித்தது.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தாவது:தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது, தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களுக்கு தெரியவில்லை. எனவே, தமிழர் அல்லாதவர்களுக்கு, தமிழ் மொழியை அஞ்சல் வழியில் கற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ் வளர்ச்சித் துறை செயலருக் கும், இயக்குனருக்கும் மனு அளித்தேன்.

இது சம்பந்தமாக கருத்துருக்களை உருவாக்கக் கோரி, தமிழ் வளர்ச்சித் துறை துணை செயலர், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ் பல்கலைக் கழகம், ‘அஞ்சல் வழியில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க, 37.36 லட்சம் ரூபாய் செலவாகும்’ என, மதிப்பிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

திட்டத்தை அமல்படுத்த, இந்த நிதியைஒதுக்கக் கோரி, தமிழ் வளர்ச்சித் துறை துணை செயலருக்கு மீண்டும் மனு அனுப்பினேன். இதுகுறித்து பரிசீலி பதாக தமிழக அரசு பதிலளித்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

 

அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல… இதுகுறித்து, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
* அரியானாவில், 2010 வரை, தமிழ் மொழி, இரண்டாவது மொழியாக இருந்தது, நம்மில் பலருக்கு தெரியாது* இந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில், தமிழ், இரண்டாவது மொழியாக தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது
* தமிழ் தெரியாதவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டியது, மாநில அரசின் கடமை
* தமிழ் மொழி கற்பதை ஊக்குவிக்க, பல திட்டங்களை வகுக்க வேண்டும்; ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும்
* தமிழர் அல்லாதவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்பிக்க, தமிழ் ஆராய்ச்சிக்கு, மேம்பாட்டுக்கு மத்திய – மாநில அரசுகளும், தமிழர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும்
* தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கு, புத்தகங்கள் வாங்க ஊக்கத் தொகை வழங்கி, மொழியை மேம்படுத்த, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்
* தமிழ் இலக்கியங்களை, பிற மொழிகளுக்கும்; பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழிக்கும் மொழி பெயர்க்க, மாநில அரசு நிதி ஒதுக்க முன் வரவேண்டும்
* தமிழ் ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய வாதி களுக்கு அங்கீகாரம் வழங்கி, மொழியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்
* உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்பு களுடன் கலந்தாலோசித்து, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம், தமிழ் மொழி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ள னர்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…
Read More

இது நம்ம ஆளு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

சித்திரை மாதத்தின் சிறப்பு

    இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம்…
Read More

ஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்

பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை…