பொதுவாகவே அரசியல் கட்சிகளுக்காக பிரச்ச்ரத்தில் ஈடுபடும் கடைநிலை பேச்சாளர்கள் ஒரு மேடையில் பேசியதற்கு அப்படியே நேர்மாறாக அடுத்த மேடையில் பேசுவது இயல்பான ஒன்று தான். ஆனால் ஒரு தேசிய கட்சியின் தலைவர், அடுத்த பிரதமர் என்றெல்லாம் அறியப்படுபவர் சர்வ சாதாரணமாக இங்கொன்றும் அன்கொன்றுமாய் பேசுவது என்பது முற்றிலும் புதுமையானது.

வேறு யார்? இந்தியாவின் விடிவெள்ளி என்று காங்கிரஸ் காரர்கள் கூச்சலிடும் ராகுல் காந்தி தான் இந்த அற்புத நிகழ்வை நிகழ்த்தி உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தன் பேச்சுகளில் முக்கியமாக தெரிவித்தது இரண்டு கருத்துகளைத் தான்

1 ) தமிழகத்தின் முதலமைச்சராக அனுபவம் நிறைந்த கலைஞர் ஆறாவது முறையாக வர வேண்டும்
2 ) தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால் மக்களின் வாழ்வு மென்மேலும் வளம் பெறும்.

இப்போது அந்த முதல் கருத்தை மட்டும் நன்றாக நினைவிற் கொண்டு கீழ்க்காண்பதை  படியுங்கள் :

கேரளாவில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி ” இம்மாநில முதல்வருக்கு வயதாகி விட்டது, அதனால் அவரால் சரியாக பனி புரிய முடியாது, மேலும் ஒருவேளை அவர் முதலமைச்சரானால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் வயது 93 (அச்சுதானந்தன்) ஆகி விடும். எனவே எங்கள் இளம் தலைமுறைக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவிக்கிறார்.

 ஐயா ராகுல்,

தமிழக முதலமைச்சராக கலைஞர் வர வேண்டும் என்கிறீர், வயதானவரை ஆட்சியில் அமர்த்த கூடாது என்கிறீர் ?

என்ன ஆயிற்று உமக்கு ஏதேனும் பித்து பிடித்து விட்டதா அல்லது எங்களை எல்லாம் பார்த்தால் உமக்கு பித்து பிடித்தவர் போல தோன்றுகிறதா?

முதல் பேசியதை நீர் மறந்து விட்டீரா? அல்லது
நாங்கள் மறந்திட வேண்டுமா?

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் , எங்கள் தமிழினத்தை தாங்கி நின்ற உம்மல பத்தி நல்லாவே தெரியும்,  அதனால நீங்க எந்த அளவுக்கு இந்த தேர்தல்ல வாக்குகளை குவிக்கிறீர் என்பதை கோவிக்கமா கொஞ்சம் பொறுத்து பாரும்…!

0 Shares:
4 comments
Leave a Reply
You May Also Like
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…
Read More

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…