நாம் சில வேளைகளில் தவறுதலாக சில கோப்புகளை அழித்து விட்டு திரும்பப் பெற முடியாமல் தவிப்பதுண்டு.

வெறும் டிலெட் மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம்.

இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப்பெறுகிறது.
அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த “Undelete Plus”

மென்பொருளை தரவிறக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்

Undelete Plus

இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்துசெல்லத்தக்க (Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.

இதன் பயன்பாடு குறித்து எளிதாக விளக்க முற்பட்டுள்ளேன். பிழைகள் இருப்பினோ அல்லது ஐயம் உண்டானலோ பின்னூட்டப்படுத்தவும்.

1.மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி, உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scan ஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.

2.உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.

3.இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில்,
பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.

4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம்.

5.மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது (Ex. 100KB).

குறிப்பு : நீங்கள் எந்த டிரைவின் கோப்புகளை திரும்பப் பெற வேண்டுமோ அங்கு இந்த மென்பொருளை பிரதி எடுத்து பயன்படுத்தினால் முடிவுகள் வேகமாக கிடைக்கும்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..! 

0 Shares:
3 comments
Leave a Reply
You May Also Like
Read More

உங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா? blog-post_4 பிடிக்கவில்லையா?

தமிழ் மொழி தலைப்புகளை பிளாக்கர் கண்டுகொள்வதில்லை. அதனால் நாம் புதிய பதிவுகளை இடும் பொது பெரும்பாலும் நமது பதிவுகளின் URL எனப்படும் தனி முகவரியை…
Read More

wi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்

“ஒயர்லெஸ் ஃபிடெலிடி” என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும் நெட்வொர்க்குகளின் ஒரு…
Read More

எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது

இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா? இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள்…
Read More

24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்

பல படங்களை ஒருங்கிணைத்து GIF அனிமேஷன் ஒன்றை உருவாக்கும் மென்பொருள் ஒன்றை தேடும் போது இந்த தளம் கிடைத்தது. இந்த இணைய கோப்புறையில் நிறைய…
Read More

ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்…

இணையம் மூலம் உலகமே சுருங்கி விட்டாலும், பெரும்பாலான இணையப் பயன்பாட்டாளர்களின் நேரம் இந்த இரண்டு நிறுவனங்களின் தளங்களுக்குள் முடிவது மிக சாதரணமான ஒன்று தான்.…
Read More

ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்க உதவும் மென்பொருள்

நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம். உதாரணமாக நம்மிடம் Music என்று…