ஒரே இணைய இணைப்பை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பயன்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பினும். WiFi மூலம் நமது இணைப்பை பகிர்வது எல்லாவற்றிலும் மிக எளிது.

இதன் சிறப்பம்சங்கள் :

* துரித இணைப்பு
* பலருடன் பகிர முடியும்
* பாதுகாப்பாக பகிரலாம்

பிரயோகிக்கப்பட்ட

இயங்கு தளம் :  விண்டோஸ் 7
கணினி           :  லெனோவோ i3 மடிக்கணினி

* இதனை அமைக்கும் முன் உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
* WiFi ஐ  இயக்கத்தில் வைக்கவும்.

1 ) கண்ட்ரோல் பேனலை திறக்கவும்.

 2 ) Manage wireless networks ஐ சொடுக்கவும்.

3 ) புதிய இணைய வழங்கியை உருவாக்க Add ஐ சொடுக்குக.

 4 ) Ad-hoc வலைப்பின்னலை உருவாக்க

 5 ) பின்வருமாறு தோன்றும் பெட்டியில்
* தங்களுக்கு விருப்பமான வலைப்பின்னல் பெயரை கொடுக்கவும்.
* பாதுகாப்பு வசதியை WEP என்று தெரிவு செய்யவும்.(பிற வசதிகளையும் பயன்படுத்தலாம்.)
* ஐந்து எழுத்து கடவுச்சொல்லை பயன்படுத்தவும்.
* இந்த வலைப்பின்னலை சேமிக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் புதிதாக உருவாக்கவும். சேமித்தால் அடுத்த முறை இதே இணைப்பை பகிர முடியவில்லை. யாரேனும் அது பற்றி தெரிந்தால் பின்னூட்டப் படுத்தவும்.

 6 ) இணைய இணைப்பை பகிர Turn on Internet Connection Sharing ஐ சொடுக்கவும். இச்செயலி முடிந்ததும் இணைய இணைப்பு பகிர்வதற்கு தாயார்.

7 ) பின்வருமாறு உங்களுக்கு connect to network icon ஐ சொடுக்கினால் கிடைக்கும்.

 8 ) இந்த இணைப்பை பயன்படுத்த விரும்பும் கணினியில் WiFi ஐ பயன்படுத்தி , கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

0 Shares:
1 comment
Leave a Reply
You May Also Like
Read More

ஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்?

 தமிழ்ப்புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பொதுவாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.இந்தச் சித்திரையில் பிள்ளைப் பிறந்தால் வெப்பத்தின் தாக்குதல் குழந்தையைப் பாதிக்கும் என்பதால் தான்…
Read More

எப்படி 2 : கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) விண்ணப்பித்து பெறுதல்

உலகம் முன்பை விட இப்போதெல்லாம் மிகவும் சுருங்கி விட்டது. வேலை,படிப்பு என்று பல காரணங்களால் நாம் இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.…