திங்கள், 16 ஜனவரி, 2012

கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி சச்சினின் 99 சதங்களை பற்றி ஒரு தொடர் பதிவு இடுவது என்று ஏதோ ஒரு ஆர்வத்தில்

99 நாட் அவுட்.!

 என்று பதிவிடத் தொடங்கினேன். ஆனால் வெறும் ஏழு பதிவுகளுடன் அது நின்று போய் விட்டது.

சச்சின் நூறாவது சதத்தை அடிக்காமல் இருப்பதற்கும் இந்த தொடர் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நூறு சதவிகிதம் தெரிந்து இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை வருடுவதால் கிடப்பில் போட்ட அந்த தொடரை பெயர் மாற்றத்துடன் தொடரப் போகிறேன்.

இந்த பதிவு முதல் தலைப்பு

100 நாட் அவுட்.!

 
சதம் #9

ரன்கள் : 115
எதிரணி : நியூசிலாந்து
இடம் : பரோடா, இந்தியா
நாள் : அக்டோபர் 28, 1994
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்

 சிறிய பரோடா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே எப்போதும் இருந்து இருக்கிறது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் இரண்டே பேர் மட்டுமே அணியின் மொத்த ஸ்கோர் வர காரணமாய் இருந்தனர்.

 ஸ்ரீநாத், பிரபாகரின் வீச்சில் தொடக்கக் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப திணறிய நியூசிலாந்து அணியில் ருதர்போர்ட் சதமடிக்க பரோரே பவுண்டரிகளே இல்லாமல் 96 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் வெற்றி இலக்கு 270 ரன்கள்.

தொடக்கம் முதலே சச்சினும் பிரபாகரும் அடித்து ஆடினார்கள்.

முதல் விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த பின் பிரபாகர் (74) ஆட்டம் இழந்தார்.

 

சச்சின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார்.இதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

அசாருதீன் அடித்த பந்து பவுலர் கையில் பட்டு ஸ்டம்பில் அடிக்க எதிர்ப்பக்கம் இருந்த சச்சின் ரன் அவுட் ஆனார். ஆனால் அதற்கு முன்பே வெற்றி கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

ஆட்ட நாயகனாக சச்சின் தெரிவானார். 

 சச்சினின் ஆட்டத் தொகுப்பு காணொளி கீழே... 

                       

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பண்டைத் தமிழரின் வாக்கு.
அது இனி எந்தளவுக்கு தமிழரின் வாழ்வில் ஒத்துப் போகப் போகிறது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

தை  மாதத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ஏன் அதை கொண்டாட வேண்டும் என்று இயற்கையாகவே சிறுவர்கள் எதுவரையில் அறிந்து இருக்கிறார்களோ அது வரையில் தான் வளமும் செழிப்பும்.
என்று பொங்கலை பிரஷர் குக்கரில் வைக்க ஆரம்பித்தோமே அன்றே அதன் சிறப்பு போயிற்று.



ஆனால் பெரும்பாலும் இன்றைய குழந்தைகள் புத்தகங்களில் படித்தும் தொலைகாட்சிகளில் (?) பார்த்தும் தான் இது உழவர் திருநாள் என்று அறிகின்றனர்.

மூன்று மாத கால உழைப்புக்கு பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் முதலான வாழ்வியல் விளைச்சல்களை கொண்டு புது அரிசி புது பானை என  தை முதல் நாள் ஆதவனுக்கும் அடுத்த நாள் உறுதுணையாய் நின்ற அவன் நண்பன் மாட்டுக்கும் உழவன் பொங்கலைப் படைத்து தன் நன்றியை வெளிப்படுத்துவான்.

இன்றைக்கு இருக்கும் மென்பொருள் துறையினரோ அல்லது வேறு எவராயினும் எப்படி தங்கள் Project முடித்ததும் Party வைத்து கொண்டாடுகிறார்களோ அதே மாதிரி தான் உழவர்களும் தங்களின் அறுவடையின் நன்னிறைவின் பின்பு விழாவாக இந்த பொங்கலை கொண்டாடுகின்றனர்.

இந்த பொங்கல் தமிழர்களுக்கு அவ்வளவு இனிமையான பொங்கலாக இல்லாமல் போவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.

தானே புயல்,
கூடங்குளம் அணுஉலை,
பெரியாறு அணை

என்று எதுவுமே தமிழர்க்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இல்லை தான்.

ஆனால் நடந்ததை மாற்ற நம்மால் முடியாது என்பதை நினைவில் நிறுத்தி,
பொறுமையாக பிரச்னைகளை அணுகி அதன் முடிச்சுகளை அவிழ்த்து இந்த தை முதல் தமிழரின் வாழ்வு வளம் பெற வாழ்த்துவதை தவிர

வேறு என் செய்வேன்?

இவண்
மனோவி


புதன், 11 ஜனவரி, 2012

இண்டியாடைம்ஸ் வணிக தளத்தில் ரூ.1500 க்கு அதிகமாக பொருட்கள் வாங்கி கீழ்வரும் கூப்பனை பயன்படுத்தி 500 ரூபாய் தள்ளுபடி பெறுங்கள்.

SR124782375070092

இந்த கூப்பன் ஜனவரி 13 வரை மட்டுமே செல்லும்.

தளத்தில் முகநூல் பயனர்கள் உள்நுழையலாம் என்பதால் புதிதாக பதிய வேண்டியதில்லை.

மேற்கொண்ட  தகவல்களுக்கு கீழ்காணும் பக்கத்திற்கு செல்லவும்..


http://shopping.indiatimes.com/GCOffers?utm_source=homesite&utm_medium=banner&utm_campaign=500GC4thJan

இந்த ஆஃபர் மூலம் ரூ.1500 மதிப்புள்ள நோக்கியா இரட்டை சிம், மியூசிக் பிளேயர் உள்ள மொபைலை ரூ.1000 த்திற்கு வாங்கலாம்.

http://shopping.indiatimes.com/mobiles/dual-sim-phones/nokia-101-phantom-black-/40855/p_B750475


புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு