அம்மாடியோவ்..!… நட்சத்திர கிரிக்கெட் டிக்கெட் விலை

1
854

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, சிரஞ்சீவி, அமிதாப் என எல்லா பிரபல ஸ்டார்களும் ஒன்றாக வருகிறார்கள். இந்த ஒன்று போதாதா டிக்கெட் விலை நிர்ணயிக்க.?

 

ஸ்டார் கிரிக்கெட் பார்க்க கட்டணம் இவ்ளோ தான்

ரூ 500, 1000, 2000, 3000, 6000, 10000…!!

அட போங்க பாஸ்… டிவியில பாத்துக்கலாம்.. என்ன ரெண்டு நிமிஷம் விளையாடினா மூணு நிமிஷம் விளம்பரம் வரும் அவ்ளோ தான?.

இந்தப் போட்டியில் எட்டு அணிகள் விளையாடுகின்றன. எட்டு அணிகளிலும் தலா ஆறு பேர்தான் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டியும் 6 ஓவர்கள் கொண்டதாக இருக்கும்.

ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சாவ்லா, கெளரி முன்ஜால், திவ்யா, ருக்மினி, கீர்த்தி சுரேஷ், ரம்யா நம்பீசன், நமீதா, தமன்னா, மனீஷா யாதவ், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நடிகைகளும் இந்த எட்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.  நடிகைகள் இடம் பெறுவதால் டிக்கெட் எல்லாமே வித்துடும்னு நம்பறாங்க போட்டி அமைப்பாளர்கள்.

இவுங்களை தவிர த்ரிஷா உள்ளிட்ட மற்ற கதாநாயகிகள் விளம்பர தூதுவர்களாக உள்ளனர்.

அப்போ நடிகர் சங்க கடனெல்லாம் நாம தான் கிரிக்கெட் பார்த்து  அடைக்கிறோமோ?

1 கருத்து

உங்கள் கருத்தை தெரிவிக்க