சரத்குமார் கோடிக்கணக்கில் மோசடி – நடிகர் சங்கம் புகார்

0
85
முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மீது அவர் நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் பூச்சி முருகன் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்தார்.

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கரணமாக, நடிகர் சங்கத்தில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரு அணிகள் உருவாகி பல பிரச்சனைகள் பெரிதாகி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று அதில் விஷால் அணி வெற்றி பெற்று நாசர் தலைவரானது அனைவரும் அறிந்ததே.

நாசர் தலைமையிலான அணியின் வெற்றிக்கு பின், நடிகர் சங்க இடத்தில் கட்டப்பட இருந்த திரையரங்கம் ஒப்பந்தம் ரத்தானது. மேலும் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சங்கத்தின் கணக்கை முறையாக விண்ணப்பிக்கவில்லை என புகார் எழுந்தது.கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றால் காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையடுத்து நேற்று இரவு சென்னை போலிஸ் கமிஷ்னரிடம் முன்னாள் தலைவர் சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் சார்பில் பூச்சி முருகன் அந்த புகார் மனுவை கமிஷ்னரிடம் அளித்தார். அந்த மனுவில் சரத்குமார் அவர்கள்  நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உங்கள் கருத்தை தெரிவிக்க