கேரளா மாநிலம் கொல்லம் பராவூர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 102 பேர் வரை பலியாயினர். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் கோவில் திருவிழா வழக்கம் போல் இந்தாண்டும் நடைபெற்றது. அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார். தீவிபத்து குறித்து விசாரணைககு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேரள அமைச்சர் தகவல்

விபத்து குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ”தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.

வழக்கு பதிவு

தீ விபத்து நடந்த கொல்லம் கோவில் நிர்வாகத்தினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதித்தோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், கோயிலுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்த ஒபப்பந்ததாரர் சுரேந்திரன் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரர் சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளார்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

தமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்?

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து…
Read More

குழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்

தானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு…
Read More

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்;மதுரை மாவட்டத்தில் போலீசார் குவிப்பு

மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார்…