எனது பயணம் ஸ்டாலினின் நமக்கு நாமே போன்று எழுதி வைத்து படிப்பது அல்ல, என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு எந்தக் கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை. கூட்டணிக்கு கட்சிகள் வந்தால் பரிசீலிப்போம். ஆனால் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்கவில்லை.

இதுதான் எனது திட்டம், இதைத்தான் நான் செய்யப் போகிறேன் என்று மக்களிடம் நான் விளக்கி வருகிறேன். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு பத்து நாள்கள் ஆகி விட்டது. எங்கே சென்றார் அவர். அவர் வந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது கூட்டணியை நாங்கள் போட்டியாக கருதவில்லை. போட்டியே அதிமுக மற்றும் பாமகவுக்கு இடையில் தான்.

மக்கள் திமுக மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அதிமுக மீது கோபத்தில் உள்ளனர். மாற்றம் என்பதை அன்புமணியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். முதன்முறையாக சினிமா துறை சாராத ஒருவரை மக்கள் தேர்வு செய்ய முடிவு செய்து விட்டனர்.

எனது பயணம் என்பது நமக்கு நாமே திட்டத்தின் சாயல் கிடையாது. இங்கு பொதுமக்கள் வந்தார்கள். கேள்விகளை கேட்டார்கள், அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். யார் வேண்டுமானாலும் இங்கு கேள்விகள் கேட்கலாம். அங்கு அப்படி கிடையாது திமுக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கேள்வி கேட்க முடியும். எனது பயணம் அதை போன்று இல்லை.

பாமக தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…