டோலிவுட்

தென்னிந்திய திரை உலகில் தமிழுக்கு அடுத்து முக்கிய பண்பு வகிப்பது தெலுங்கு திரை உலகம். என்ன தான் அவ்வப்போது நல்ல திரைப்படங்கள் தெலுங்கில் வந்தாலும் பொதுவாக அதிக மசாலா படங்களே தெலுங்கில் வளம் வரும்.

இந்நிலை இப்போது மாறி வருகிறது. பிரமோத்சவம், பாகுபலி பிரமோத்சவம், பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களின் மூலம் தற்போது கதை, படைப்பு என இரண்டிலுமே தெலுங்குப் படைப்பாளிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் கமர்ஷியல் மசாலாக்களில் இருந்தும், தெலுங்குலகம் தற்போது மீள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ba 8

இந்த மாற்றத்தின் அறிகுறியாக தேசிய விருதுகளை இந்தாண்டு தெலுங்குப் படங்கள் வென்றுள்ளன. தெலுங்குப் படங்கள் 1954 தொடங்கி 2016 வரையிலான தேசிய விருதுகளில் இதுவரை எந்த ஒரு தெலுங்குத் திரைப்படமும், சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதை வென்றதில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பாகுபலி இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

வரலாறு

63 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்குத் திரைப்படம், என்ற பெருமை பாகுபலிக்கு கிடைத்துள்ளது. தெலுங்குப் படங்கள் தேசிய விருதை வென்றாலும், சிறந்த படம் என்ற பிரிவில் இதுவரை எந்த ஒரு படமும் விருதை வென்றதில்லை.

ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த விஷுவல் எப்பெக்ட்ஸ் என 2 தேசிய விருதுகளை, இந்த ஆண்டு வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய விருதுகள் தேசிய விருதுகளுக்கும், தெலுங்குப் படங்களுக்கும் ரொம்ப தூரம் என்று சொல்லும் அளவுக்கு தெலுங்குலகின் நிலை இருந்தது. பச்சை, மஞ்சள், சிகப்பு என அடிக்கிற கலரில் டிரெஸ் போட்டுக்கொண்டு கத்தரி வெயிலில் ஹீரோவும், ஹீரோயினும் ரொமான்ஸ்+டான்ஸ் செய்வது. 2,3 காட்சிகளுக்கு ஒருமுறை தேவையில்லாத பாடல் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோயிசம் போன்ற காரணங்களால் தேசிய விருது என்பது தெலுங்குப் படங்களுக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்தது.

 

முதல் தேசிய விருது இதன்மூலம் தெலுங்குப் படங்கள் இதுவரை தேசிய விருதைக் கைப்பற்றியதில்லை, என்ற கூற்றை பாகுபலி முறியடித்து விட்டது.இதனால் பாகுபலி குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

கொஞ்சம் கஷ்டம் இல்ல, ரொம்ப கஷ்டம்

தேசிய விருதை வென்றாலும் பாகுபலி குழுவினர் தற்போது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் என்னவென்று விசாரித்தால் பாகுபலி 2 வில் ஒருசில காட்சிகள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லையாம்.இதனால் மீண்டும் அந்தக் காட்சிகளை எடுக்க ராஜமௌலி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு ஆகும் பொருட்செலவு ஒருபக்கம் இருக்க, மறுபடியும் கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்குமே, என்று நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்களாம்.

 

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…   தெலுங்கில்…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…