கவிக்கியம்

சுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று ! தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும். அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் சச்சின் டெண்டுல்கரை ஒரு மாவட்ட அளவிலான அணியில் கூட இடம் கிடைக்காதவன் அறிமுகம் செய்து வைப்பது போலாகி விடும். அதனால் அந்த மாதிரி பாவம் எதையும் புரியும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. நேராக கொடுக்க வந்ததை கொடுத்து விட்டு பின்பு கதை அளக்கிறேன். சுஜாதாவின் நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிக்க இயலாதவர்கள் பின்வரும் பக்கத்திற்கு சென்று அவரின் சில ஆக்கங்களை பதிவிறக்கி கொள்ளலாம். சுஜாதா மின்னூல்கள் ... Read more

புன்னகை

  • Categories: Featured, கவிதை
பார்த்தும் பார்க்காததுபோல் செல்கிறாய், சிறு புன்னகையால் உன் காதலை சொல்லிவிட்டு.

முத்தம்

  • Categories: Featured, கவிதை
சத்தமில்லாமல் ஒரு முத்தம் வேண்டும் என கண்மூடி காத்திருக்கிறேன் கனவிலாவது வருவாயா?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக ஒவ்வொருவரும் சில சமுகத்தின் பழக்கவழக்கத்தினை ஏன் என்று கேட்காமல் பின்பற்றுகிறோம்.  சில தனி மனிதர்கள் அப்படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாளவேண்டும்.  காரணம், தனி மனிதர்கள் மேல் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள் மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை, அதன் கொள்கைகளைப் பொறுத்து தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு இதுபோன்ற ஒரு முடிவை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமுகத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.   சரி, சரியல்ல என்பதைத் தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகிற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும்போழுது அதற்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பாலான ... Read more

எடை

  • Categories: Featured, கவிதை
இதயத்தின் உள்ளே ஏனோ                                                                                                     புதிதாய் எடை கூடியது தடவி பார்த்தால்                                                                                     ... Read more

காதல்

  • Categories: Featured, கவிதை
கண்டதும் காதல் எப்படி                           என நினைத்திருந்தேன் உனது விழியை நேரில் காணும் வரையில்

காதலின் எல்லை

  • Categories: Featured, கவிதை
காதலில்,                                                                                                                           நீ மட்டும் இன்பத்தின் எல்லை கொஞ்சம் நரகம்,கொஞ்சம் சொர்க்கம் இரண்டையும் தோன்ற வைக்கிறாய் போதும் போதும் என்ற அளவிற்கு என்னை முழுவதும் ஆட்கொள்கிறாய் இனி காதலே வேண்டாம் என்று தோன்ற வைக்கும் வலியையும் தருகிறாய்,

பார்வை ஒன்றே போதுமே

  • Categories: Featured, கவிதை
                       உன் பார்வை ஒன்றே போதுமடா    நீ  பார்த்தால் பாறையிலும் பால் சுரக்கும் பாலைவனத்திலும் பூ பூக்கும் காதலே பிடிக்காத எனக்குள்ளும் காதல் மலரும்.

நாணம்

  • Categories: Featured, கவிதை
பூக்களும் நாணத்தில் தலைகுனியுமடி,அதைவிட அழகான உன் கண்களை கண்டு

என் காதல்

  • Categories: Featured, கவிதை
என் காதலை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்ல எனக்கு தெரியவில்லை, எத்தனை பக்கம் எழுதினாலும்உனக்கு புரியவில்லை. காத்திருப்பேன் என் வாழ்நாள் முழுவதும், என் காதல் உனக்கு புரியும் வரை…