அப்படியா…?

அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் – வடிவேலு

அரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ‘அரசியலில் அமைதியாகி விட்டீர்களே’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு , ‘‘நல்லா இருக்கு நியாயம்.. உன் சீலைல போச்சாம் சாயம்.. இங்கே என்ன பொதுக்குழுவா நடக்குது. அதெல்லாம் எதுக்கு நமக்கு. விட்ருங்க… நம்ம படம் பத்தி மட்டும் பேசுவோம்’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார்

அரசியல் என்பது செருப்பை போன்றது – கமல்

தேர்தல் ஆணையம் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி நடிகர் கமல், வாய்ப்பிருந்தால் வாக்குப் பதிவு செய்வேன் என கூறியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. கமல் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என்றார். தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ... Read more

அங்காடித்தெருவுக்கு பிறகு இறைவிதான் -அஞ்சலி

  இறைவி எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெசலான படம் என்கிறார் அஞ்சலி. நாம் நிறைய படம் பண்ணுவோம். அப்படி நடிக்கிற எல்லா படங்களுமே மனதில் நிற்பதில்லை. ஆனால் இறைவி போன்ற படங்கள் இதயத்திற்கு நெருக்கமானவை. காலத்துக்கும் நினைவில் நிறைந்திருக்கும். அப்படியொரு அற்புதமான படம் இது. அங்காடித்தெருவுக்கு அப்புறம் நான் திருப்தியடைகிற வகையிலான படங்கள் அமையவில்லை. அப்படி அமைந்த படம் இந்த இறைவிதான். அதற்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இந்த இறைவி படத்தை எந்த ஜானருக்குள்ளும் அடக்க முடியாது. இது ஒரு தனித்துவமான படம். டைரக்டர் கார்த்தியோட அடுத்த ஸ்டெப் இது. அதோடு இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக உள்ளது. பாடல்களிலேயே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ஸ் புதுமையாக உள்ளது. முக்கியமாக, பெண்களை பெருமைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ள இந்த படத்தில் நானும் பெருமைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால்தான் இந்த படத்தை எனக்கு ரொம்ப ... Read more

இனி என்னைய பத்தி பேசினா…. இயக்குனர் பாலா எச்சரிக்கை

“என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை பாரதிராஜா நிறுத்தவேண்டும்” என்று இயக்குநர் பாலா எச்சரித்துள்ளார். ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில் இயக்குநர் பாலா சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க பூஜை போட்டிருக்கிறார். ஆனால் நான் வேலராமமூர்த்தி எழுதிய ‘கூட்டாஞ்சோறு’ நாவலில் இருக்கும் சில சம்பவங்களை எடுத்துக்கொண்டு மேலும் சில காட்சிகளைச் சேர்த்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன். நான் எடுக்க இருப்பது கதை. பாரதிராஜா எடுக்க இருப்பது வரலாறு. இரண்டுக்கும் சம்மந்தமில்லை. நான் எடுக்கும் படத்துக்கு வேறு தலைப்பை வைக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் 4 மாதங்கள் ஆகும். இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவும், எழுத்தாளர் ரத்னகுமாரும் என்னைப்பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள். இந்தப் படம் குறித்த என் விளக்கத்தைச் சொல்ல இன்று இயக்குநர் ... Read more

அம்மாடியோவ்..!… நட்சத்திர கிரிக்கெட் டிக்கெட் விலை

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, சிரஞ்சீவி, அமிதாப் என எல்லா பிரபல ஸ்டார்களும் ஒன்றாக வருகிறார்கள். இந்த ஒன்று போதாதா டிக்கெட் விலை நிர்ணயிக்க.?   ஸ்டார் கிரிக்கெட் பார்க்க கட்டணம் இவ்ளோ தான் ரூ 500, 1000, 2000, 3000, 6000, 10000…!! அட போங்க பாஸ்… டிவியில பாத்துக்கலாம்.. என்ன ரெண்டு நிமிஷம் விளையாடினா மூணு நிமிஷம் விளம்பரம் வரும் அவ்ளோ தான?. இந்தப் போட்டியில் எட்டு அணிகள் விளையாடுகின்றன. எட்டு அணிகளிலும் தலா ஆறு பேர்தான் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு போட்டியும் 6 ஓவர்கள் கொண்டதாக இருக்கும். ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சாவ்லா, கெளரி முன்ஜால், திவ்யா, ருக்மினி, கீர்த்தி சுரேஷ், ரம்யா நம்பீசன், நமீதா, தமன்னா, மனீஷா யாதவ், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நடிகைகளும் இந்த எட்டு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.  நடிகைகள் இடம் ... Read more

63 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

டோலிவுட் தென்னிந்திய திரை உலகில் தமிழுக்கு அடுத்து முக்கிய பண்பு வகிப்பது தெலுங்கு திரை உலகம். என்ன தான் அவ்வப்போது நல்ல திரைப்படங்கள் தெலுங்கில் வந்தாலும் பொதுவாக அதிக மசாலா படங்களே தெலுங்கில் வளம் வரும். இந்நிலை இப்போது மாறி வருகிறது. பிரமோத்சவம், பாகுபலி பிரமோத்சவம், பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களின் மூலம் தற்போது கதை, படைப்பு என இரண்டிலுமே தெலுங்குப் படைப்பாளிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் கமர்ஷியல் மசாலாக்களில் இருந்தும், தெலுங்குலகம் தற்போது மீள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தின் அறிகுறியாக தேசிய விருதுகளை இந்தாண்டு தெலுங்குப் படங்கள் வென்றுள்ளன. தெலுங்குப் படங்கள் 1954 தொடங்கி 2016 வரையிலான தேசிய விருதுகளில் இதுவரை எந்த ஒரு தெலுங்குத் திரைப்படமும், சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதை வென்றதில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பாகுபலி இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. வரலாறு 63 ... Read more

இது அது இல்லீங்க … சர்தார் கப்பர் சிங் படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு

இந்தி திரைப்படம் டபாங் உடன் தெலுங்கு திரைப்படம் சர்தார் கப்பர் சிங்  கதை ஒத்துபோகிறது என கூறி அப்படத்தின் வெளியீட்டை முடக்க அர்பாஸ் கான் தயாரிப்பு நிறுவனம் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் என்ன தான் கதைக்கரு ஒன்று போல தோன்றினாலும் தெலுங்கு படம் வேறு விதமான பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டது போல் இருப்பதால், இதை காபிரைட் மீறல் எனக் கொள்ள முடியாது. எனவே பவன்கல்யாண் படத்தை வெளியீட்டில் கோர்ட் தலையிட மறுத்து உள்ளது.

என்ன கமல் சார் இப்படி பண்ணிடீங்க?

தன்னிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவரும் தூங்கா வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளார் கமல் ஹாஸன். ராஜேஷ் எம் செல்வாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழ்த்துத் தெரிவித்த கமல் ஹாஸனிடமே, தன் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ராஜேஷ். நேற்று கமல் அலுவலகத்துக்கு குழந்தையுடன் சென்றார் ராஜேஷ். குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்ட கமல், ‘ஹோஷிகா மிரினாளினி (Hoshika Mrinalini)’ என்ற பெயரைச் சூட்டினார். இது சமஸ்கிருதப் பெயராகும். நல்ல தமிழில் லட்சம் பெயர்கள் இருக்கும்போது, ஒரு தமிழ் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறாரே உலகநாயகன்… வெளியில்தான் தமிழ்ப் பற்றாளர் வேஷமா? என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் கமலை விமர்சித்துள்ளனர்.