சினிமா

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…   தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர். அதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். கே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ... Read more

ரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது

கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். Photo by moviestatus8 கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரஜினியின் இளையமகளும் இயக்குனருமான சவுந்தர்யா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி, அவரது தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும். அவரை பற்றி மற்றவர்களை விட எங்களுக்கு நன்றாக தெரியும் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். எனவே அவரை பற்றி படம் சிறப்பாக அமையும். என்று கூறி இருக்கிறார். இது ... Read more

கபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்

கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு ரூ.20,100/- ஈட்டும். ஆனால் இது சாதாரண வீடியோக்களுக்கு , திரைப்பட டீசர்கள் இதை விட அதிகமாக வருமானம் ஈட்டும். எப்படி என்றால் வீடியோவுக்கு முன் வரும் விளம்பரம் தான். விவரம் : http://youtubemoney.co/ சரி கபாலி படத்தின் வீடியோக்கள் சாதாரண வீடியோ என்ற ரீதியில் எவ்வளவு வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.

பேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே

இணையத்திலும் பொது வெளியிலும் தேர்தல் களத்திலும் இன்றைய பேசு பொருள் கஸ்தூரி பாட்டிதான். இவர்தான் அதிமுக, திமுக இரண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…!’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார். ஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள். இன்னும் சிலரோ.. ‘அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன?’ என்று ஆதரிக்கிறார்கள். சரி, இந்தப் பாட்டி எப்படி இரண்டு விளம்பரங்களிலும் ... Read more

அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் – வடிவேலு

அரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ‘அரசியலில் அமைதியாகி விட்டீர்களே’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு , ‘‘நல்லா இருக்கு நியாயம்.. உன் சீலைல போச்சாம் சாயம்.. இங்கே என்ன பொதுக்குழுவா நடக்குது. அதெல்லாம் எதுக்கு நமக்கு. விட்ருங்க… நம்ம படம் பத்தி மட்டும் பேசுவோம்’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார்

கபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க

ரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக அளவில் டிரண்டு ஆகி விட்டதில் படக்குழு மகிழ்ச்சி. எண்பது இலட்சத்திற்கும் மேலான தடவை இதுவரை பார்க்கப்பட்ட இந்த டீசரை பற்றி பிரபலங்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.   ராதிகா ஆப்தே (கபாலி நாயகி) : சிறந்த மனிதர்… ரஜினிகாந்த்… சிறந்த டீசர்.. கபாலி… எஸ்.எஸ்.ராஜமௌலி : இதுதான் ஸ்டைல், இதுதான் ரஜினி, இதுதான் தலைவா… ராம் கோபால் வர்மா : ரஜினிகாந்த் ஏன் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார் என்பதற்குக் காரணமிருக்கிறது. ரஜினி சாரைத் தவிர வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் திரையில் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்த முடியாது. முதல்நாளில் இந்தப் படத்தை நான்கு முறை பார்க்க விரும்புகிறேன். கபாலி, பாகுபலிக்குப் பிதா போல இருக்கிறார், ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே. தனுஷ் : நெருப்புடா… ... Read more

கபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்

கபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ  டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர். கபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும் லுங்கி கட்டினவன்னு நெனச்சியாடா கபாலி டா….. அக்மார்க் ரஜினி டச்… ரஜினியை ரஹ்மான் இசையில் பார்த்து பழகிய நமக்கு சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்க வைத்து உள்ளது.

அரசியல் என்பது செருப்பை போன்றது – கமல்

தேர்தல் ஆணையம் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி நடிகர் கமல், வாய்ப்பிருந்தால் வாக்குப் பதிவு செய்வேன் என கூறியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. கமல் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என்றார். தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ... Read more

மனிதன்–2016 விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மனிதன். உதயநிதி – ஹன்சிகா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து இப்படம் உதயநிதியை தனித்து காட்டும் என நம்பி படம் பார்க்க சென்றோம். கதை: பெரிய வக்கீலாகி சாதிச்ச பிறகுதான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வருகிறார் உதயநிதி. தன்னை நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்ன? யார் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்? அந்த வழக்கைத் தொடர்ந்ததால் உதயநிதி சந்திக்கும் மோதல்கள், இழப்புகள் என்ன? இறுதியில் லட்சியத்தை அடைந்தாரா? என்பது மீதிக் கதை. உதயநிதி சாதாரண வக்கீல் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கோபப்படுவது, கலவரம் ஆவது, குழம்புவது, வருத்தப்படுவது என்று எல்லாவற்றுகும் ஒரே மாதிரி ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அதை மட்டுமாவது இனிமேல் கவனிங்க உதய். மற்றபடி ஸ்லோமோஷனில் பேசும் போதும், ... Read more

தெறி-ஒரு மில்லியனுக்கும் மேல் வசூலில் சாதனை

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி.வெளியான ஆறே நாட்களில் 100 கோடியை வசூலித்தது. நடிகர் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் …விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலித்தது,தெறி இந்த வரிசையில் மூன்றாவது படம் எனவும்,இயக்குனர் அட்லி ,ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவரொட்டி பகிர்வு செய்யப்பட்டுள்ளது , அதில் தெறி திரைப்படம் வட அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மற்றுமோர் இன்பச்செய்தி; விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் மே 2-ம் தேதி விஜயின் புதிய படம் தொடங்குகிறது.இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்திலும்,ஜகபத் பாபு,டேனியல் பாலாஜி,சதீஷ் போன்றோர் நடிக்க வுள்ளனர்.இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.