புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகள் எண்ணிக்கை நிச்சயம் வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும்.

இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் படி நாட்டில் உள்ள காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1411 என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்தது.

ஆனால் புலிகள் உலவும் காட்டுப் பரப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புலிகள் வாழும் முக்கிய காட்டுப் பகுதிகளில் மனிதத் தலையீடுகள் அதிகமாவதும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும், பல்வேறு காரணங்களுக்காக காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று ராஜஸ்தான் மாநிலம் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் கள ஆய்வாளராக இருக்கும் சுகதீப் பட்டாச்சார்யா தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதே போல அரசால் வெளியிடப்பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை ஒரு உத்தேச எண்ணிக்கை என்றும் அவர் கூறினார்.

“இந்த முறை சுமார் 700 புலிகள் கேமாராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடங்களில் சுமார் 30 சதவீத பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காட்டின் அளவு, புலிகள் உட்கொள்ளும் விலங்கினங்களின் எண்ணிக்கை, அங்கேயுள்ள மனித நடமாட்டம போன்ற புலிகளின் எண்ணிகைகையை பாதிக்கும் காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு மொத்த புலிகளின் எண்ணிக்கை என்று ஒரு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இது ஒரு தோராய மதிப்பீடு.” என்றார் சுகதீப் பட்டாச்சார்யா.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 1875 ஆகவும் குறைந்தபட்சமாக 1550 ஆகவும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நன்றி : பிபிசி 

0 Shares:
3 comments
  1. சகோ, தலைப்பினைப் பார்த்துப் பட படக்க ஓடி வந்தேன். ஏதோ போர் தலைப்பு என்று. இனியும் போர் வேண்டாம். நம்ம வனவிலங்குக் கூட்டத்திலை உள்ளவையைப் பற்றி ஒரு கணக்கெடுப்புடன் கூடிய தகவல். நன்றிகள்.

Leave a Reply
You May Also Like
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…
Read More

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.

*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும்…
Read More

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான்

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்…. பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்……………. பதாகைக்கு…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…