இதற்கு முன்னர் நிறைய முறைகள் வேற்றுகிரகவாசிகள் பற்றி படித்தும், திரைப்படங்களில் பார்த்தும் விட்டாயிற்று. அதனால் இம்முறை பெரிதாக எதுவும் இந்த செய்தியின் பால் நம் கவனம் வருவதில்லை.

முதலில் இந்த படத்தை பாருங்கள்.

  

இந்த படத்தை பார்த்ததுமே எனக்கு அமரர் சுஜாதாவின் ஞாபகம் தான் வந்தது. அவர் ஒரு முறை சொல்லி இருப்பார் அதென்ன கிடைக்கிற எல்லா ஏலியன்களுமே இரண்டு கால்,இரண்டு கை,மூக்கு,வாய்,கழுத்து என எல்லாமே மனிதனை ஒத்தே இருக்கிறது, வேற்று கிரகம் தானே வேறு மாதிரி உடலமைப்புகள் இருக்கக் கூடாதா என்று கேட்டிருப்பார்.

இதிலும் பாருங்கள் உருவம் ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் மற்றபடி மனித உருவ அமைப்பு வரும்படி இருக்கின்றது. மனிதன் தான் படைக்கும் கற்பனைகள் கூட தன்னை வெல்லக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பான்.

ஐயோ.. ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்து தொலைத்து விடப்போகிறது, அப்புறம் விசா எதுவும் இல்லாமல் வீடு தேடி வந்து உதைக்க போகிறார்கள் வெற்று கிரகவாசிகள் இல்லை.. வேற்று கிரகவாசிகள்.

சைபீரியாவில் இரண்டு வழிப்போக்கர்களால் இந்த பனியினில் உறைந்த உருவம் கிடைக்கப்பெற்றிருக்கும் இடம் ஏற்கனவே அடையலாம் தெரியாத பறக்கும் தட்டுகள் தோன்றிய இடமாம். அதனால் இப்போது அந்த நிகழ்வுகளுக்கும் இதற்கும் முடிச்சு போட்டு, வேற்றுகிரகவாசிகள் வந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போகும் இடம் என்றெல்லாம் இணையத்தில் முடிக்கி விடுகின்றனர்.

அந்த உருவம் ரொம்பவே பழுது பட்டு கிடைத்ததாம். வலது கால் உடைந்திருக்க, மண்டை ஓடு போன்ற பகுதியில் கண்கள் இருந்ததற்கான ஆதாரமாக ஓட்டைகள் இருப்பதாக படத்தில் தெரிகிறது.

மேற்கண்ட காணொளியை கண்ட பலரும் ” நிஜந்தான், வேற்று கிரக வாசிகள் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து போகின்றனர், அதனால் தான் முன்பெல்லாம் அங்கே பறக்கும் தட்டுகள் காணக் கிடைத்தன”  என்று சொன்னாலும்.

சிலர் ஆதாரம் இல்லாமல் இதெல்லாம் டேதுவும் நம்ப முடியாது என்கின்றனர்.

ஆனாலும் அறிவியலின் படி இது போன்ற உருவங்கள் பூமியிலியே சாத்தியம் தான். ஜீன் குறைபாடு, வேற்றினச் சேர்க்கை என பல காரணிகளால் இது போன்ற உருவங்கள் உருவாக வாய்ப்பு உண்டு. நாமே சில நேரங்களில் பத்திரிகைகளில் வித்தியாசமான உருவ அமைப்பில் குழந்தைகள் பிறப்பதை பார்க்கிறோமே.

பதிவு பலரையும் சேர வாக்களியுங்கள்…  

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த…
Read More

வெற்று வரலாற்று கற்பனைகள்…! (1)

வரலாறு புராணம் இரண்டுமே நடந்து முடிந்து விட்ட சம்பவங்களின் தொகுப்பு தான். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. புராணம் ஆதாரங்கள் எதுவும்…
Read More

நீங்கள் கையொப்பம் இட தெரிந்தவரா?

எனக்கு பெரும்பாலும் இந்த ஒரே நாளில் மாற்றம் என்பன போன்ற அதீத நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படி திடீரென எதாவது மாற்றம் ஒரே…

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா?

இணைய உலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த, மிகப் பெரும்பான்மையானோர் தளத்தின் ஊடே இணைந்து பயன்படுத்தும் தளம் முகநூல். அதன் தோற்றம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள்…
Read More

மாணவர்கள் கொண்டாடுவதா,திண்டாடுவதா?

சென்ற தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை குறித்து பெரிதும் ஆலோசிக்கப்பட்டு,கடைசியில் அவசர அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டும்…
Read More

தமிழ்நாட்டு ராம்தேவும் வெள்ளை காக்காவும்…!

நான் சொல்ல வரும் நபர் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரும் சக்தி என கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டவர். திடீர் திடீர்…