ஆஸ்திரேலிய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான அணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்து உள்ளார். இருப்பினும் ஒரு வீரராக அணியில் தொடர்வதென அவர் முடிவெடுத்துள்ளார்.

பிராட்மனை தவிர்த்து உலகின் தலிசிறந்த மட்டை வீச்சாளர்களில் சச்சினுக்கு அடுத்த இடம் எப்போதும் பாண்டிங்குக்கு தான். தன் மட்டை வீச்சு திறன் குறித்த கேள்விகளுக்கு இந்தியாவுடன் நடந்த போட்டியில் அழுத்தமான முற்றுபுள்ளி வைத்தார்.

கேப்டன் ஆக ஆஸ்திரேலிய அணியை 300 போட்டிகளுக்கும் மேலாக வழி நடத்திய பாண்டிங், ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரும் நட்சத்திர வீரரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒய்வு பெற்றதும் அணியை பழைய மகிரி வெல்ல முடியாத அணியாக தொடர்வதில் வெற்றி காண முடியாமல் போய் விட்டது.

பன்னிரண்டு ஆண்டுகளாக உலக கோப்பையை தன் வசம வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் பாண்டிங்கின் பங்கு நிச்சயமாய் பெரிது. 1999 உலக கோப்பையை வெல்ல இவரின் கலத்தடுப்பும் பேட்டிங்கும் உதவி புரிந்தது பின்னர் நடந்த இரண்டு உலக கொப்பையிலும் தலைமை தங்கி வெற்றி பெற்றவர். “மூன்று முறை” தொடர்ந்து கோப்பை வென்ற அணியாக ஆஸ்திரேலியாவை மாற்றியவர்.

ஆனால் அதே போன்ற மற்றுமொரு “மூன்று முறை” தான் அவரின் இந்த முடிவுக்கு காரணம். ஆஷஸ் தொடரில் மூன்று முறை தோல்வி அடைந்த ஒரே கேப்டன் பாண்டிங் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிந்து போய் விட்டது.

கேப்டன் பதவியில் விலகும் முடிவு முழுக்க முழுக்க தன்னால் எடுக்கப்பட்டது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தன்னை விலகுமாறு எல்லாம் நிர்பந்திக்கவில்லை என்றும் பாண்டிங் சொல்லி இருந்தாலும் பின்னாலிருந்து அந்த அணியின் பழைய வீரர்கள் குரல்கள் அனைத்தும் பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

” தனக்கு இனிமேல் ஒரு புதிய தொடக்கம்” என்றார் பாண்டிங்.

பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் 12,363 ரன்களும், ஒரு தின போட்டிகளில் 13,288 ரன்களும் குவித்துள்ளார். அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் ஒரு தின போட்டிகளில் இரண்டாம் இடமும், டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இடமும் வகிக்கிறார்.

மைகேல் கிளார்க் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

0 Shares:
4 comments
Leave a Reply
You May Also Like
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

புனே சென்னை ஆகுமா?

புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு…