ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.”வேகத்தில்’ மிரட்டிய பாலாஜி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 81 ரன்களுக்கு சுருண்டு, ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பாலாஜி மிரட்டல்:
முதல் ஓவரே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரட் லீ அனல் பறக்க பந்துவீச… அதனை சக ஆஸ்திரேலிய வீரரான வாட்சன் எதிர்கொண்டதை காண முடிந்தது. போட்டியின் 3வது ஓவரை வீசிய பாலாஜி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் வாட்சன்(11) போல்டாக, கோல்கட்டா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்துவந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். பவுனிக்கர்(15), பசல்(3) ஏமாற்றினர். ராத்(11) ரன் அவுட்டானார். இக்பால் அப்துல்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த அசோக் மனேரியா ஓரளவுக்கு நம்பிக்கை தந்தார். யூசுப் பதான் பந்தில் ராஸ் டெய்லர்(6) வெளியேறினார். போட்டியின் 14வது ஓவரை வீசிய
பாலாஜி இரட்டை “அடி’ கொடுத்தார். முதல் பந்தில் ரஹானே(6) போல்டானார். 6வது பந்தில் மனேரியா(21)காலியானார். சாகிப் அல் ஹசன் சுழலில் அமித் சிங்(0), டெய்ட்(0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பிரட் லீ வேகத்தில் திரிவேதி(0) வெளியேற, ராஜஸ்தான் அணி 15.2 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டது.
கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி, இம்முறை கோல்கட்டா அணி வீரராக அசத்தினார். இவர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

சுலப வெற்றி:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு முதல் ஓவரிலேயே ஷான் டெய்ட் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் அனுபவ காலிஸ் “டக்’ அவுட்டானார். வார்ன் சுழலில் பிஸ்லா(9)சிக்கினார். இதற்கு பின் கேப்டன் காம்பிர், மனோஜ் திவாரி இணைந்து அசத்தலாக ஆடினர். மிகவும் விவேகமாக பேட் செய்த இவர்கள், துடிப்பாக ரன் சேர்த்தனர். இவர்களை வெளியேற்ற ராஜஸ்தான் கேப்டன் வார்ன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. டெய்ட் ஓவரில் ஒரு இமாலய சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார் திவாரி. மறுபக்கம் காம்பிர் ஒரு பவுண்டரி அடித்து, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். கோல்கட்டா
அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. காம்பிர்(35), திவாரி(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வென்ற கோல்கட்டா அணி மீண்டும் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
ஆட்ட நாயகன் விருதை பாலாஜி வென்றார்.

மிக குறைந்த ஸ்கோர்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 81 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இத்தொடரில் மிக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, மும்பை அணிக்கு எதிராக டில்லி அணி 95 ரன்கள் எடுத்தது.
* ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி(81 ரன்கள்). முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் (58 ரன்கள், எதிர்-பெங்களூரு, 2009), கோல்கட்டா (67 ரன்கள், எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…
Read More

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.

*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும்…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

ஹர்ஷா போக்லே – கல்தா கொடுத்த பிசிசிஐ

ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90% பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை வெளிப்படை காரணம்…