தமிழ்ப்படம்

விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன் அழகு குட்டி பேபி சாரா  நடித்து வெளிவந்திருக்கும் தமிழ்ப்படம் தான் “தெய்வத் திருமகள்”.
சில காலம் முன்பு வெளியான தமிழ்ப்படம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்ட எந்த வித அத்து மீறல்களும் இல்லாத ஒரு தமிழ் சினிமா.

வெற்றி தந்த வேட்கை

பொதுவாகவே ஒரு வெற்றி பெற்றால் அடுத்து அதை விட பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதரில் இருந்து விஜய் வேறுபட்டவர் அல்ல.மதராசப்பட்டினம் தந்த வெற்றி இயக்குனர் விஜய்யை கடுமையாக உழைக்க வைத்திருப்பது படம் முழுக்கத் தெரிகிறது.

இதற்கு சரியான ஆயுதமாக சீயான் விக்ரம் கிடைக்க தமிழ்த் திரை உலகில் மசாலா தடவாத, லாஜிக் ஓட்டைகள் அதிகள் இல்லாத, தேவை அற்ற டூயட் இல்லாத ஒரு நல்ல படத்தை தந்திருப்பதுடன், படம் மிகவும் ட்ரை ஆகாமல் ஆங்காங்கே கதையின் ஊடே நகைச்சுவையை புகுத்தி எவரையும் இருக்கையை விட்டு ஓடி விடாமல் பார்த்துக் கொள்கிறார்.

விக்ரம் – நடிப்பு இலக்கணம்?

படத்தில் பெரிய பலம் குழந்தையாகவே வாழ்ந்த நம்ம சீயான் தான்.
முதல் பாதியில் சீன்கள் கொஞ்சம் நீளமானதாக இருந்தாலும் கதையை ஒட்டிய திரைக்கதை என்பதால் சீட்டை விட்டு யாரும் எழுந்து போனதாக நினைவில்லை.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார்.

கதை 

ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்ட இளைஞன் கிருஷ்ணா. மிட்டாய் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். அவனை கோடீஸ்வரரின் மகள் காதலித்து மணக்கிறாள்.பிரசவத்தில் பெண் குழந்தை பெற்று விட்டு இறந்து போகிறாள். அக்குழந்தையை கிருஷ்ணா பாசத்தை கொட்டி வளர்க்கிறான்.

ஊட்டி கான்வென்டில் சேர்ந்து படிக்கவும் வைக்கிறான். அப்பள்ளியின் தாளாளர் ஸ்வேதாவுக்கு குழந்தை தனது அக்காள் மகள் என தெரிய வருகிறது. உடனே தந்தையை வர வழைக்கிறாள். அவர் கிருஷ்ணாவிடம் இருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு சென்னைக்கு போய் விடுகிறார்.

குழந்தையை தேடி அலைகிறான் கிருஷ்ணா. அவனது பரிதாபமாக நிலை கண்டு வழக்கறிஞர் அனுராதா உதவ முன் வருகிறாள். குழந்தையை மீட்க கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு போடுகிறார். அவருக்கு எதிராக பணபலமும் ஆள் பலமும் கைகோர்க்கிறது.

குழந்தை விக்ரமுக்கு கிடைத்ததா? என்பது உயிரை கரைக்கும் கிளைமாக்ஸ்.

சாரா – ச்சோ ஸ்வீட்

விக்ரமின் குழந்தையாக நடித்திருக்கிருக்கும் இந்த குழந்தை பார்த்த எவரையும் உடனே பிடித்திட செய்யும் அழகும்,
 கொஞ்ச நேரத்தில் அட! போட வைக்கும் அளவுக்கு நடிப்பும் கொண்டு நம்மை வியக்க வைக்கிறாள்.

அந்த இறுதிக் காட்சியில் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் விக்ரமும் சாராவும் ஜாடையால் பேசுவது,
வார்த்தைகளில் அடங்காத ஒரு உணர்வு நிச்சயம் பிறக்கும் நெஞ்சம் இருக்கும் எவருக்கும்.

மற்றோர்

அனுஷ்கா வழக்கறிஞர் தொழிலை திறம்பட செய்கிறார். இவரிடம் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் எதுவும் இந்தப் படத்தில் கிடைக்கப் பெறாது என்றாலும் நடிப்பிலும் தான் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் இந்த பொம்மாயி.

அமலா பால் குழந்தையின் சித்தியாக வருகிறார். பள்ளியின் தாளாளராக இருக்கும் இவருக்கு குழந்தை பற்றி தெரிந்ததும் அப்பாவிடம் சொல்லி குழந்தையை கிருஷ்ணாவிடம் இருந்து பிரிக்கிறார். அழகாக வந்து போகிறார் அவ்வளவுதான்.

சந்தானம், கதை நகர மறுக்கும் இடங்களில் பயன்பட்டிருக்கிறார். தனது வழக்கமான வசனங்களை ஓரங்கட்டி விட்டு படத்திற்கு ஏற்ப மாற்றி நடித்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

இசையும் ஒளிப்பதிவும் :

 படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் என்றால் அது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு தான்
ஓட்டை தியேட்டரிலும் ஊட்டி குளிரை வரவழைக்கும் இவரது ஒளிப்பதிவு.
அத்தனை காட்சிக்களும் அவ்வளவு அழகு.
ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் படத்துக்கு படம் முன்னேற்றம் காட்டுகிறார் தந்தை மகள் காட்சிகளில் நிச்சயம் இசை சர்வதேச தரம்.
பாடல்கள் நன்றாக இருந்தாலும் மனதில் அதிக நேரம் நிற்காமல் போக காரணம் தெரியவில்லை.


தவிர்க்க கூடாத திரை ஓவியம்

மொத்தத்தில் நிஜமாகவே தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி தான் இது.
அதிலும் வெற்றி பெறப் போகிற முயற்சி…
 எவ்வளவோ கோடம்பாக்க குப்பைகளை பார்க்கும் நமக்கு இது நிச்சயம் ஒரு மாறுபட்ட தவிர்க்க கூடாத திரைப்படம் தான்..

ரசித்த கம்மென்ட்ஸ் 

கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

– தட்ஸ் தமிழ்

“ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா…..”, சப்பாணி சொன்னவுடன் மனசெல்லாம் ஒரு பாரம் வந்து நிரம்பும். அது போல் எதுவும் இல்லை. எனக்கென்னவோ விக்ரம் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணியிருக்கிற மாதிரி தோணுது. மற்றபடி அந்த குட்டிப் பாப்பா ச்சோ… ச்சோ… ச்வீட். :))

# என் மண்டையை உடைப்பதற்கு கையில் கல்லெடுத்த, என் Friends List -ல் இருக்கும் விக்ரம் ரசிகர்கள், தயவு செய்து கல்லைக் கீழே போடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.. :)) :)) :))

தமிழ் செல்வி  , முக நூல்

சம காலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் நிலா என பெயரிடப்படும் : தெய்வ திருமகள் எஃபக்ட்

ஸ்ரீனிவாசன் 

தெய்வத் திருமகள் – பிதாமகனை பிஞ்சு மகள் நடிப்பில் மிஞ்சுகிறாள் பேபி சாரா ராக்ஸ்

தேவ் 

0 Shares:
8 comments
  1. உங்கள் வலைப்பூ அருமை.

    எனக்கு படம்
    அவ்வளவாய் பிடிக்கவில்லை நண்பரே.

  2. @katz வலைப்பூவை பாராட்டியமைக்கு நன்றி…
    படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் என்னும் எண்ணத்தை அகற்றி விட்டு பார்த்தால் ஒருவேளை பிடிக்கலாம்

Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…   தெலுங்கில்…
Read More

பாகுபலி-2

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…
Read More

வசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…
Read More

மனிதன் (2016) பாடல்கள் வெளியீடு

ரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம்,…
Read More

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல்,…