உலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்

0
78
தமிழகத்தில் உள்ள மருத்துவம் தொடர்பான ஓலைச் சுவடிகள், புதுச்சேரியில் உள்ள சைவம் தொடர்பான ஓலைச் சுவடிகள் உலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.

இந்த பதிவேட்டில் மேலும் இரண்டு ஆவணங்களை சேர்க்க சுயட்சையான அமைப்புகளுடன் மத்திய கலாச்சாரம் அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பழமையான ஆவணங்களை பாதுகாப்பதற்காக உலக நினைவுச் சின்னங்கள் பதிவேடு திட்டத்தை யுனஸ்கோ மேற்கொண்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தில் உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பாரம்பரிய ஆவணங்களை பாதுகாப்பதற்கு உரிய நுணுக்கங்களை மேற்கொள்வது, அவற்றை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல உதவுவது, இந்த ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். நமது நாட்டிலிருந்து தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள், கிழக்கிந்திய கம்பெனியின் சுவடிகள், புதுச்சேரியில் உள்ள சைவ தொடர்பான ஓலைச் சுவடிகள் மற்றும் ரிக்வேதம் தொடர்பான ஓலைச் சுவடிகள் உலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய பாரம்பரியமிக்க ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

உங்கள் கருத்தை தெரிவிக்க