நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு ஆலையின் நிலை தொடர்பாக புதிய கவலைகள் தோன்றியுள்ளன. இந்த ஆலையில் இருக்கின்ற ஒரு உலை அருகே சோதனை செய்யப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரில் சாதாரணமாக இருப்பதை விட கிட்டதட்ட ஒரு கோடி மடங்கு அதிகளவு கதிர்வீச்சு காணப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் இருந்தே இந்த கதிர்வீச்சு கொண்ட நீர் கசிவதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு கூறுகின்றது.

ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு விட்டதாக இந்த ஆலையை நடத்தும் நிறுவனம் கூறியுள்ளது.

அணு உலையை ஸ்திரப்படுத்துவதற்காக மின்சார வசதியை ஏற்படுத்த கடுமையாக போராடி வரும் பணியாளர்களுக்கு அடிக்கடி உலையில் காணப்படும் ஆபத்தான சமிஞ்சைகள் பெரும் சவாலாகவும், இடையூறாகவும் இருக்கின்றன.

இதே நேரத்தில் ஃபுகுஷிமா அணு ஆலை இருக்கின்ற கடல் பகுதியிலும் கதிர்வீச்சின் வீரியம் அதிகரித்துள்ளது. ஆனால் கடலின் நீரோட்டம் இந்த கதிர்வீச்சின் தாக்கத்தை நீர்த்து போக செய்து விடும் என அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த கடல் பகுதியில் காணப்படுகிற கதிர்வீச்சு கொண்ட ஐயோடினின் அளவானது பாதுகாப்பு என்று கூறப்படுகின்ற அளவை விட 1850 மடங்கு அதிகமாக இருப்பதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் ஆலையை சுற்றிலும் இருக்கின்ற வான் பகுதியில் காணப்பட்ட கதிரியக்கத்தின் வீரியம் குறைந்து இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் எங்கிருந்து வருகிறது அதை எப்படி தடுப்பது எப்படி என்பதே ஆலையில் போராடி வரும் பணியாளர்களுக்கு தலையாய கவலையாக இருக்கிறது.ஜப்பான் அணு உலையில் ஏற்பட்ட இந்த சிக்கலானது இன்னும் பல வார காலத்திற்கு நீடிக்கலாம் என சர்வதேச அணு சக்தி மையத்தின் தலைவரான யூகியா அமானோ தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை ஜப்பானின் அமைச்சரவை செயலரான யுகியோ எடோனோவும் எதிரொலித்துள்ளார். ஆலைக்குள் இருக்கும் கதிர்விச்சால் பாதிக்கப்பட்ட பொருளை வெளியே எடுப்பதற்கு காலச் செலவு நிறைய ஏற்படும் என கூறினார்.

இதே சமயம், அணு ஆலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு விவரமாக தகவல்களை கொடுக்காமைக்கு ஜப்பான் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விரிவுப்படுத்தும் திட்டமும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.


நன்றி் : பிபிசி

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

ஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்

பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை…
Read More

பிரிட்டனின் அரண்மனைகள் மேம்படுத்தப்படுகின்றன

பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான விண்ட்ஸர் கேசில், ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைகளில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்கள் சுமார் 370 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவிருக்கின்றன.…
Read More

தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில்…
Read More

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த…
Read More

பாகிஸ்தானில் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிர்ச்சி

ரிக்டர் அளவில் 6.8 அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையை தாக்கியது. இதுவரை இரண்டு பேர் பலியானார்கள், 4 பேர்…
Read More

விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின்…