உலக கோப்பையில் எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாத அணி தென் ஆப்ரிக்கா. உண்மையில் அதிர்ஷ்டம் இல்லை என்பது என்னவென்று நோக்கினால் அன்றைய தினத்தில் அவர்களின் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே குறிக்கும்.

அதே அளவுகோளில் பார்த்தால் இன்று நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று சொன்னால் என்னை விட மகா முட்டாள் வலை வீசி தேடினாலும் கிடைக்க மாட்டான்.

குப்தில், மெக் குல்லம் – இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மிக குறைந்த ரன்களுக்கு தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த பின்னர், அணியை சரிவினின்று தங்களின் மிக நேர்த்தியான,பொறுமையான,விவேகமான துடுப்பாட்டத்துடன் ரைடரும் டெய்லரும் மெதுவாக மீட்டு எடுத்தனர். அந்த இணை 114 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது. டெய்லர் 43 ரன்களும், ரெய்டர் 83 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்த பின்னர் மற்ற நியூசிலாந்து வீரர்கள் வெகு விரைவாகவே தங்கள் ஆட்டத்தை இழக்க, வில்லியம்சன் மட்டும் 38 ரன்கள் எடுத்து அணியை 221 என்ற நல்ல நிலைமைக்கு இட்டு சென்றார்.

“ஒரு கேட்ச் ஒரு மேட்ச்”

ஒரு கேட்ச் ஆட்டத்தை எப்படி திசை திருப்பும் என்பதற்கு இந்த்த போட்டி ஒரு நல்ல சான்று. டிம் சவுத்தீ வீசிய பந்தில் கல்லிஸ் அடித்த பந்தை ஜேகப் ஓரம் ஓடிக்கொண்டே பிடித்த கேட்ச் ஆட்டத்தை சட்டென நியூசிலாந்தை நோக்கி திருப்பிற்று. 47 ரன்களுடன் கல்லிஸ் சென்ற பின்னர் மற்றுமொருமுறை தென் ஆப்ரிக்கா கோப்பை கனவுகள் அகல தோல்வி அடைந்தது.

தஹிர்,பீட்டர்சன்,போத்தா எப்படி தென் ஆப்ரிக்காவிற்கு பந்து வீச்சில் இருந்தனரோ அதை போல நியூசிலாந்துக்கு வெட்டோரி,நாதன் மெக் குல்லம்,வுட் காக்  சுழலில் திணறடித்தனர்.

ஆனால் ஜேகப் ஓரம் பிடித்த இரண்டு கேட்ச் மற்றும் நான்கு விக்கெட்டுக்கள் நியூசிலாந்தை வெற்றி அடைய வைத்தது.

இது தான் வெட்டோரி விளையாடும் கடைசி போட்டி என்றெல்லாம் மீடியாவில் பேசினார்கள். ஆனால் அவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வைத்து எல்லோர் எண்ணத்தையும் பொய்யாக்கி உள்ளார்.

இந்தியா என்ன செய்யுமோ?

0 Shares:
2 comments
Leave a Reply
You May Also Like
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

ஹர்ஷா போக்லே – கல்தா கொடுத்த பிசிசிஐ

ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90% பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை வெளிப்படை காரணம்…