ம்.. புரிகிறது “என்ன தமிழ் மீது ஒற்றை காணோம்” என்று பார்க்கிறீரோ?

” தலைப்பிலேயே இத்தனை தடுமாற்றாமா?” என்பதும் எனக்கு புரிகிறது.

எனக்கு சற்று நேரம் மிகப்பெரும் குழப்பமே வந்து விட்டது.

எதை வேண்டுமானாலும் மாற்றும் கலைஞர் , ஒரு வேளை ஒற்று தமிழுக்கு பொட்டு வைத்தாற் போல் இருப்பதால் அது பிடிக்காமல் எடுத்து விட்டாரோ என எண்ணினேன், ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை .

தமிழ் மீதான தங்களின் அளவு கடந்த பற்றைத் தான்   தமிழின தலைவரின் தொலைக்காட்சியில் இவ்வாறு காட்டி இருக்கின்றனர்.

இன்று ( 19.08.2010) மாலை ஒளிபரப்பான தாம் தூம் திரைப்படத்தின் ஊடே ஒளிபரப்பான தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான விளம்பரங்களில் தமிழின் ஒற்றை எடுத்து விட்டனர்.

(ழ்–>ழ)

முதலில் இந்த மாநாட்டிற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டதுமே

” இது தமிழ் நோக்கிலான மாநாடா அல்லது தமிழர்களை தம் பக்கம் கவர்ந்து இழுக்கும்  மாநாடா?”

என்று ஒரு சந்தேகம் இருந்தது இப்போது அது நீங்கி விட்டது இம்மாநாடு இழுக்கும் மாநாடு தான் என முடிவாகி விட்டது. முதலில் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற என் ஆவல் அவல் ஆகி போனது.

தமிழை வளர்க்கும் மாநாடு என்று சொல்லி ஒற்றை நீக்கி தம் பற்றை நிறுவி உள்ளனர் இந்த தமிழினத்தினர்.

மிக சமீபத்தில் இந்த அரிய மாநாட்டிற்க்கு தலைமை,வரவேற்பு,நன்றி என பொறுப்புக்களை சுமப்போர் எவரென தெரிய வந்தது.

“ஐயகோ”

அனைவருமே அரசியல்வாதிகள் இல்லை உடன்பிறப்புகள்.

ஏன் இவர்கள் தான் இப்போது இருக்கும் தமிழர்களிலே மிகவும் புலமை பெற்றவரோ? வேறு எந்த தமிழ் அறிஞர்களும் இப்பூவுலகில் இல்லையோ? இந்த பொறுப்புகளிலே கலைஞர் ஒருவர் தவிர மற்றோர் எவரும் பொருந்துவார் இல்லை. நாம் எப்படி அறிஞர்களை உலக கழக மாநாட்டிலே எதிர்ப்பார்க்க முடியும்..?

என்ன பெரிதாக சாதித்து விட்டு இந்த மாநாடு என்று புரியவில்லை..

ஒருவேளை நம் சகோதர தமிழின ஈழத்தினரை ஒடிக்கியதற்காக எடுக்கப்படும் விழாவோ?

தொடரும்…

0 Shares:
1 comment
  1. நான் முதலில் தமிழ் செம்மொழியானதால் மற்ற மலேசிய இனத்தவரிடம் My mother tongue "Thamizh" has been declared as classical language என்று பெருமைமிதப் பட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் அது இந்திய மொழிகளில் பிந்திய மொழியாக ஆயிரம் அகவையாக அங்கீகாரம் பெற்றுள்ளதென அறிந்ததும் ஆடிப்போய் விட்டேன்.இது பெருமை பட வேண்டிய விடயமே அல்ல.வேதனைப்பட வேண்டிய விடயம் அல்லவா.பாரசீகமொழி,ஆரியர்களின் மொழியாகிய சமற்கிருதம்,அரபுமொழி ஆகிய அனைத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் தமிழக முதல்வர் மு.க கூறுவது போல் உலகமொழிகளுக்கெல்லாம் முத்தமொழியாகிய அன்னைத் தமிழ் மொழிக்கில்லையே என்று வெட்கித்தலை குனிந்து போனேன்.

Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…
Read More

இது நம்ம ஆளு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும்…
Read More

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல்,…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

சித்திரை மாதத்தின் சிறப்பு

    இராசிச் சக்கரத்தில் மேட ராசியில்  சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம்…