தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி சிறந்தது பாக்ஸ் ஆபிஸ் மட்டிற்குமல்ல விருதுகளுக்கும் தான் போலிருக்கிறது. இதுவரையில் சிறந்த படம் நடிகர் என எல்லாமே பாலிவுட் அல்லது மலையாள திரை உலகம் என்று இருக்க இப்போது தமிழ் திரைப்பட உலகம் மொத்த விருதுகளையும் குவித்து உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

அதுவும் வளரும் நடிகர்,இயக்குனர்கள் பெறுவது அதிலும் மகிழ்ச்சி. தேர்வுக் குழுவினர் இப்போது தான் மக்கள் பார்க்கும் படங்களிற்கும் விருது கொடுகமுனைந்துள்ளனர் இது தொடர வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தமிழ் நடிகர் தனுஷூம், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

58 வது தேசிய விருதுகள் பெற்றோர் விபரம், சிறந்த நடிகருக்கான விருது, சலிம் குமார் மற்றும் தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடிகைக்கான விருது, தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், மராத்தி நடிகை மிடாலிக்கும் கிடைத்திருக்கிறது. சிறந்த துணை நடிகருக்கான, விருது மைனா படத்திற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த திரைக்கதை மற்றும் இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது, வெற்றி மாறனுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடனத்திற்கான விருது, தினேஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கான விருது, மலையாளத்தில் வெளிவந்த அதாமந்தே மக்கான் அபு படத்திற்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த பொழுதுபோக்கு படமாக சல்மான் நடித்த தபாங் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிவியல் படத்திற்கான விருது, ஹார்ட் அன்ட் ஹார்ட் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிறந்த விளையாட்டு படத்திற்கான விருது, பாக்சிங் லேடிஸ் படத்திற்கு கிடைத்திருக்கிறது. சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது, லிவிங் ஹோம் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

0 Shares:
2 comments
Leave a Reply
You May Also Like

எங்கேயும் காதல் – இனிக்காத சக்கர வள்ளி..!

எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை…

ராவணன் பாசமான வீரன்…

நாயகனின் வேகம், தளபதியின் வீரம், அலைபாயும் காதல், என மணிரத்னம் விருந்து ஒரு பக்கம் என்றால், ரோஜாவின் மணம் குறையாமல் நம்மை காதல் தேசத்தில்…
Read More

இனி என்னைய பத்தி பேசினா…. இயக்குனர் பாலா எச்சரிக்கை

“என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை பாரதிராஜா நிறுத்தவேண்டும்” என்று இயக்குநர் பாலா எச்சரித்துள்ளார். ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர்…
Read More

75 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் தெறி ட்ரைலர்

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன், பேபி நைனிகா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான…
Read More

ரஜினியுடன் ஏழு கதாநாயகிகள் : ராணா பற்றி கே.எஸ்.ரவிக்குமார்

ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார். ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு,…
Read More

எந்திரன் – முதல் தகவல் அறிக்கை

எந்திரன் – முதல் தகவல் அறிக்கை (முழு பதிவு விரைவில்…) ஒரு அதீத பயத்துடன் அரங்கில் நுழைந்தேன்.. ஏனெனில் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த…