இந்தியாவால் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். நீண்ட காலமாக, அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருகிறார். அவரை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டாலும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் பதில் கூறி வந்தது.

இந்நிலையில், மே 2-ம் தேதி அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒசாமாவை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரி்க்கா கொன்றது போல், தாவூத்தை இந்தியா கொல்ல வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

இதையடுத்து, தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது மகன் மொயினின் திருமணம் மே 28-ம் தேதி கராச்சியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென திருமண இடத்தை அவர் துபைக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டின் தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் தாவூத்தின் மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது பச்சைப் பொய் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares:
1 comment
Leave a Reply
You May Also Like
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில்…
Read More

இங்கு சரக்கு கிடைக்காது – பீகார் மாநிலம் அதிரடி

இந்திய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் முதலில் சில பகுதிகளில் துவங்கி, ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக…
Read More

இந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி

தில்லி பெண் பிரியதர்ஷினி சாட்டர்ஜி FBB பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டதை வென்றார். உலக அழகி 2016 அலங்கார அணிவகுப்பில் பிரியதர்ஷினி  இந்தியா…
Read More

ஆம் ஆத்மி தேசிய நடவு செய்ய துணிவு

அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி சட்டசபை தேர்தலை வென்ற கையோடு தேசிய  அளவிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். மிக நிதானமாக வேட்பாளர் தெரிவு…