கடந்த ஓராண்டில் சச்சின் தன் 20 வருட கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட்டார்.
ஒரு தின போட்டிகளில் கனவாக இருந்த 200 ரன்களை நிஜமாக்கி காட்டினார்,

டெஸ்ட் போட்டிகளில் 50வது சதம் அடித்தார்,
சர்வதேச அரங்கில் 30,000 ரன்களை கடந்தார்,
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடிக்கும் தன் வாழ்நாள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.
இப்போது 2010 ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதை பெற்றிருக்கிறார்.

விஸ்டன் விருதுகள் :

கிரிக்கெட்டின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருதுகள் 142 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணியில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஐந்து விருதுகளுக்கு பதிலாக இம்முறை நான்கு தான் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தான் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிக்கும்,நேர்த்தியாக விளையாடும் வீரர் சச்சினை தவிர்த்து வேறு எவரும் இருக்க முடியாது. (நிச்சயமாக மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்). அப்படிப்பட்ட வீரருக்கு இவ்விருது கிடைப்பது இதுவே கொஞ்சம் தாமதம் தான். ஆனாலும் விஸ்டன் 2007 ஆம் ஆண்டின் போது ஒருவேளை விஸ்டனின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருது 2004 ற்கும் முன்பே இருந்திருக்குமேயானால், சச்சின் 1998 ஆம் ஆண்டே இதற்கு பெயரிடப்பட்டிருப்பார் என்று தெரிவித்து இருந்தது.

சச்சின் 2010 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களுடன் 1500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். மேலும் 200, 50வது சதம் என எதையும் அவர் சொத்தை அணிகளுடன் அடிக்கவில்லை, இன்றைய நிலைமையில் மிக திறமையான வேகப்பந்து வீச்சு திறன் கொண்ட தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராகவே அடித்துள்ளார்.

ஆஷஸ் சாதனை :

மேலும் இந்த விஸ்டன் இதழில் இங்கிலாந்து அணியின் கடந்த ஆண்டின் சாதனைகள் வெகுவாக பாரட்டப்பட்டிருக்கின்றன. ஆஷஸ் தொடர் மூலம் இங்கிலாந்து அணி இரண்டு மாத காலத்திற்கு ஆஸ்திரேலிய செய்தி தாள்களின் முதல் பக்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தது என்றும் முதல் முறையாக ICC  நடத்திய கோப்பை ஒன்றை T20 உலக கோப்பை  பெற்றதும் பாராட்டுக்கு உள்ளாயின. ஆனாலும் அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஈக்களை போல உலக கோப்பைக்கு முன்னரும் உலக கோப்பையிலும் விழுந்த விட்டதாக அது வருத்தம் தெரிவிக்கிறது.(காயம் காரணமாக)

மைகேல் வான் ஆஷஸ் பற்றி கூறுகையில் ” இங்கிலாந்து வீரர்கள் தங்களின் பேட்டிங்கை நாட்களில் எண்ணிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய அணியினர் நிமிடங்களிலேயே முடித்து விட்டனர்” என சாடி உள்ளார்.

2009 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியும் இதில் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். பங்களாதேஷின் தமிம் இக்பால், அவர் நாட்டில் இருந்து தெரிந்தெடுக்கப்படும் முதல் வீரராகிறார். சச்சின் தனது பிடித்தமான நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவரும் இடம் பிடிக்கவில்லை.

அணியில் இடம் பிடித்தோர் :

1.விரேந்தர் சேவாக், இந்தியா
2.தமிம் இக்பால், பங்களாதேஷ்
3.குமார் சங்ககாரா. இலங்கை
4.சச்சின் டெண்டுல்கர், இந்தியா
5.ஜாக் காலிஸ், தென் ஆப்ரிக்கா
6.விவிஎஸ் லக்ஷ்மன், இந்தியா
7.மகேந்திர சிங் தோனி, இந்தியா,கேப்டன்,விக்கெட் காப்பாளர்,
8.கிரேம் ஸ்வான், இங்கிலாந்து,
9.டேல் ஸ்டெய்ன், தென் ஆப்ரிக்கா,
10.ஜாகிர் கான், இந்தியா
11.ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து.

மேலும் முதல் முறையாக புகைப்பட கலைஞர் ஒருவரை விஸ்டன் கௌரவிக்கிறது.
அவர் விஸ்டன்-எம்சிசி யின் ஸ்காட் பார்பர்.

இந்த விஸ்டன் இதழை முடிந்தால் சச்சினுக்காக வாங்கி வையுங்கள்..!

0 Shares:
3 comments
  1. அலஸ்டர் குக், இங்கிலாந்து.
    அவரை பற்றி சொல்ல மறந்து விட்டேனே, ஆஷஸ் தொடரில் 766 ரன்கள் அடித்திருந்தார், இருந்தாலும் இங்கிலீஷ் சம்மர் போட்டிகளில் சரியாக விளையாடாததால் விஸ்டன் கிரிக்கெட்டர் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனார்.

    ஆனாலும் அவரை அட்டைப்படத்தில் போட்டு விஸ்டன் கௌரவப்படுத்தி உள்ளது..

  2. அலஸ்டர் குக், இங்கிலாந்து.
    அவரை பற்றி சொல்ல மறந்து விட்டேனே, ஆஷஸ் தொடரில் 766 ரன்கள் அடித்திருந்தார், இருந்தாலும் இங்கிலீஷ் சம்மர் போட்டிகளில் சரியாக விளையாடாததால் விஸ்டன் கிரிக்கெட்டர் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனார்.

    ஆனாலும் அவரை அட்டைப்படத்தில் போட்டு விஸ்டன் கௌரவப்படுத்தி உள்ளது..

Leave a Reply
You May Also Like
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

மும்பை முதல் வெற்றி

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 5 வது லீக்…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…