முதலில் இந்த பதிவிற்கு திமுக – காங்கிரஸ் மீண்டும் கூட்டு என்று தான் தலைப்பிடல்லாம் என்றிருந்தேன். ஆனால் அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்தது. பொதுவாக நாம் பேசும் வசனம் ” மறந்தால் தானே நினைப்பதற்கு “.

அதே போல் பிரிந்தால் தானே மீண்டும் இணைவதற்கு இவர்கள் தான் பிரியவே இல்லை.
ஒரு வழியாக வெகு விரைவாகவே இரு தரப்பிற்கும் வேண்டியது சுமுகமாக பேசி முடிக்க பட்டு விட்டது. காங்கிரசிற்கு அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து விட்டது. ஆனால் திமுக எதற்காக அடம் பிடித்தார்கள் என்பதும் தெரியவில்லை, அது எப்படி நிறைவேறியது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அதுவாக இருக்குமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

நம் தலையில் நாமே எழுதி கொள்ள கொடுக்கப்படும் வாய்ப்பு தான் தேர்தல் அதை நாம் எவ்வாறு எழுதுகிறோம் என்றால் பிறரிடம் பணமோ அல்லது ஏதோ பெற்று கொண்டு நமக்கு எதிராக நாமே எழுதி கொள்கிறோம். சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போது தான் ஐந்து ஆண்டுகட்கு விதி நன்றாக அமையும்.

சரி, சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறேன்.
திமுக கூட்டணி உறுதி ஆகி விட்டது அதன் தொகுதி பங்கீடு நிலவரங்கள் வருமாறு :

தி.மு.க., 121
காங்., 63 .
பா.ம.க., 30,
விடுதலைச்சிறுத்தைகள் 10,
கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7,
முஸ்லிம் லீக் 2,
மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…
Read More

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…