இன்று முதல் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற போகின்றன. அது ஏனோ தெரியவில்லை இருபது ஓவர் போட்டிகளை பார்த்தாலே எனக்கு பிடிப்பதில்லை. இரண்டு ஓவருக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் நடக்கும் இப்போட்டிகள் மீது ஈர்ப்பு வருவது நிறைய பேருக்கு எளிது ஏனெனில் முழு போட்டியும் ரன்களும் விக்கெட்டுகளும் நிறைந்ததாய் இருக்கும்.

அதையெல்லாம் தாண்டி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பல அற்புதமான வீரர்களை களத்தில் காண முடியும் என்பது தான் இந்த போட்டிகளை நான் காணுவதற்கு ஒரு நல்ல காரணம்.

இந்தியா உலக கோப்பை வாங்கியதில் எதோ சதி இருக்கிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் லாபம் பார்க்க நடந்த ஏற்பாடு என்றெல்லாம் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நடிப்பிற்கும் நிஜத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தான் அவ்வாறு சொல்வர். உலக கோப்பையை வென்றதும் இந்திய வீரர்களின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி அழுகை சும்மாவெல்லாம் வராது. நிச்சயம் அது அவர்களின் ஒருமித்த ஆட்ட திறனுக்கு கிடைத்த வெகுமதி தான். அதுவமல்லாமல் சச்சினின் 21 ஆண்டு கால எதிர்பார்ப்பு இப்போது தான் நிறைவேறி உள்ளது.

இவ்வாறு பெரும் பரபரப்புடன் முடிவடைந்த ஒருதின கிரிக்கெட் உலகக்கோப்பைக்குப் பின்னர் 4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
மே 28-ந்தேதி வரை 51 நாட்கள் இந்த கிரிக்கெட் திருவிழா நடைபெறும். மொத்தம் 74 ஆட்டம் நடைபெறும். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தோனி தலைமையிலான நடப்பு வாகையரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இம்முறை இடம் பெயர்ந்துள்ளனர். மட்டையடிப்பில் தலைவர் தோனி, ரெய்னா, முரளிவிஜய், அல்பி மார்கல், பிராவோ, அனிருதா ஸ்ரீகாந்த் உள்ளனர். மைக்ஹஸ்சி சில ஆட்டங்களுக்குப் பிறகு அணியில் இணைந்து கொள்வார். பந்துவீச்சில் சவுத்தி, குல சேகரா, சுதிப் தியாகி, அஸ்வின் உள்ளனர்.

கொல்கத்தா அணியில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காம்பீர், யூசுப் பதான் போன்ற சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் அந்த அணியில் உள்ளனர். இதுதவிர காலிஸ், பிரட் ஹாடின், மார்கன் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். பந்து வீச்சில் பெர்ட் லீ முத்திரை பதிக்க கூடியவர்.

கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணியில் ஆடிய தமிழரான எல்.பாலாஜி இம்முறை சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா சார்பில் ஆட உள்ளார்.

0 Shares:
1 comment
  1. கிரிக்கெட்டுக்கும் எனக்கும் எழாம் பொருத்தம். என்ன சச்சின் ரெஸ்ட்ராண்ட் [[மும்பை, பாந்திரா]] சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்…

Leave a Reply
You May Also Like
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில்…
Read More

இங்கு சரக்கு கிடைக்காது – பீகார் மாநிலம் அதிரடி

இந்திய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் மாநிலத்தில் முதலில் சில பகுதிகளில் துவங்கி, ஆறு மாத காலத்திற்குள் படிப்படியாக…
Read More

இந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி

தில்லி பெண் பிரியதர்ஷினி சாட்டர்ஜி FBB பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டதை வென்றார். உலக அழகி 2016 அலங்கார அணிவகுப்பில் பிரியதர்ஷினி  இந்தியா…