இந்திய கிரிக்கெட் அணி நாளை உலக கோப்பையை வெல்வதற்கான கடைசி போட்டியில், இறுதி போட்டியில் விளையட போகிறது. இலங்கையும் இந்திய அணிக்கு நிகரான அணி தான். டெண்டுல்கருக்கு இது கிட்டத்தட்ட கடைசி உலக கோப்பை முரளிதரனுக்கு இது தான் கடைசி சர்வதேச போட்டி. தங்கள் விளையாடிய களம மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டில் தங்களுக்கென மிகப்பெரும் பெயரை எடுத்து வைத்துள்ள இந்த இரு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து விளையாடும் கடைசி போட்டி என்பதால் மேலும் போட்டிக்கு விறுவிறுப்பு கூடும்.
உலக கோப்பை வரலாற்றை பொறுத்த வரை சச்சின் முரளிதரனை நான்கு முறை சந்தித்துள்ளார். ஆனால் டெண்டுல்கர் எப்போதுமே அவருக்கு தன் விக்கெட்டை கொடுத்தது இல்லை. இலங்கைக்கு எதிராக சச்சின் உலக கோப்பையில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்துள்ளார். 2006 உலக கோப்பையில் 137 ரன்கள் எடுத்த போட்டியில் ஜெயசூரியாவின் அதிரடியில் இந்தியா தோல்வி அடைந்தது.அரை இறுதி போட்டியில் தனி ஆளாக போராடிய சச்சின் 65 ரன்கள் எடுத்தார் ரசிகர்களின் கோபத்தால் அப்போட்டி இலக்கை வசம் போனது.
 
2003 உலக கோப்பையில் 97 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்த சச்சின் 2007 உலக கோப்பையில் அதே அணியிடம் சரியாக விளையடாததால் இந்தியா முதல் சுற்றிலியே வெளியேறியது.
சச்சின் இதற்கு முன் தான் விளையாடிய ஐந்து உலக கோப்பைகளில் ஒரே முறை (2003) மட்டும் இறுதி போட்டியில் விளையாடி உள்ளார் ஆனால் அதில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை என்ற கவலையை விட இந்தியா கோப்பையை வெல்லாமல் போனது நிச்சயம் அவருக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கி இருக்கும் இந்த உலக கோப்பையை வெல்வதன் மூலம் தனது எல்லா சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக இதனை அவர் வைக்க ஆசைப்படுவார். 
தோனி இது குறித்து கூறுகையில் “சச்சின் ஒவ்வொரு முறை ஆடுகளத்துக்குள் நுழையும் பொது மட்டுமல்ல பயிற்சியின் போதுங்கூட தன்னை முழுதும் அர்ப்பணிப்பதால் தான் இவ்வளவு உயரத்தை அடைந்துள்ளார். நான் பார்த்த மட்டில் அவர் எப்போதும் சாதனியாகளுக்காக விளையாடியதில்லை, அவர் விளையாட சாதனைகள் தானே அவர் பக்கம் வருகின்றன.” என்று சொன்னார். மேலும் அவரின் ஆட்டம் நாளைக்கு நிச்சயம் இந்திய அணிக்கு உறுதுணையாய் இருக்கும். மற்ற போட்டிகளை போல இதுவும் ஒரு போட்டி என்றே தாங்கள் நோக்குவதாகவும் அவர் கூறினார்.
நாளைய போட்டியில் நெஹ்ரா விளையாட மாட்டார் என்றும் நான்காவது பந்து வீச்சாளராக அஷ்வின் அல்லது ஸ்ரீசாந்த் இருக்ககூடும் என்றும் தெரிகிறது. இலங்கை அணியில் மேத்யூஸ் விளையாட மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
நாளைய போட்டியில் சச்சின் 100 வது சதம் கண்டு இந்தியா வெல்ல துடிக்குது மனசு இருப்பினும்,
நான் என் செய்வேன்?
தலைப்பு உபயம் : “கொல்ல துடிக்குது மனசு”ன்னு ஒரு டப்பிங் படமாம், நண்பர்கள் பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அவர்களை விட்டால் போதும் என்று தியேட்டரை விட்டு ஓடி வந்து விட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் பாதித்த அந்த படத்தை தியேட்டரில் என் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் பார்த்தார்கள் என்று சொன்னால் நான் எதோ ஏப்ரல் ஃபூல் செய்வதாக நினைத்து விடுவீர்கள் அதனால் கொஞ்சம் ஏற்றி சொல்கிறேன் மொத்தமாய் 24 பேர் பார்த்தார்களாம் போதுமாம்.
0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

புனே சென்னை ஆகுமா?

புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு…