மனோவி

வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

அடிக்காதீங்க வாத்தியாரே

  • Categories: சமூகம், பகிர்வு, வாட்ஸ்ஆப் பகிர்வு
​யோவ்…… யார்யா நீயி…. இந்த தென்னமரத்தைப் போய் குச்சியால அடிச்சிக்கிட்ருக்க……… பின்ன என்ன சார்…..  போனவருசம் 60 தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்ன 30 கூட தரமாட்டீங்குது… என்ன நெனச்சக்கிட்ருக்கு….. நீங்க என்ன லூசா சார்….. தென்ன மரம் காய் குறைவா தருதுன்னா..  அதுக்கு என்ன குறைன்னு பாருங்க.. உரம் கம்மியா இருக்கா…. இல்ல வேர்ல எதாவது சேதாரம் இருக்கா…. இல்ல தண்ணி சரியா பாய்ச்சலியா…. இல்ல எதாவது பூச்சி அரிச்சிருக்கான்னு பாருங்க… அதவிட்டுப்பட்டு அத அடிச்சா… பைத்தியக்காரத்தனமால்ல  இருக்கு……  இது பைத்தியக்காரத்தனம்னா.. உங்ககிட்ட படிக்கிற மாணவர்களை சரியா படிக்கலைன்னு பிரம்பால அடிக்கிறீங்களே..அது மட்டும் தப்பில்லையா… ஒரு மாணவன் சரியா படிக்கலைன்னா… அதற்கான சூழல் தப்பா இருக்கலாம்… அது அவங்க பேரண்ட்ஸா… இல்ல கூடப்படிக்கிற நண்பர்களா…. இல்ல அவன் கத்துக் கொள்ற முறையா…  இத ஆராய்ந்து அதுக்கேத்தமாதிரி ட்ரீட் பண்ணுங்க… கண்டிப்பா பலன் இருக்கும்… அத விட்டுப்புட்டு மனரீதியாக பக்குவமில்லாத பசங்கள ... Read more

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை. ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது. தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள். சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ... Read more

பெண்தான் கடைசி 

  • Categories: கோப்புறை, சமூகம், வாட்ஸ்ஆப் பகிர்வு
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.  இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.  சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் ... Read more

கபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்

கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு ரூ.20,100/- ஈட்டும். ஆனால் இது சாதாரண வீடியோக்களுக்கு , திரைப்பட டீசர்கள் இதை விட அதிகமாக வருமானம் ஈட்டும். எப்படி என்றால் வீடியோவுக்கு முன் வரும் விளம்பரம் தான். விவரம் : http://youtubemoney.co/ சரி கபாலி படத்தின் வீடியோக்கள் சாதாரண வீடியோ என்ற ரீதியில் எவ்வளவு வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?’ என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, இந்தி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்துவது போல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை துவங்க உத்தரவிடக் கோரி, லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், நீதிபதி கிருபாகரன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், உலக தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு ... Read more

எது சிறந்த பள்ளி?

2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட,  1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற அரசு பள்ளிகள் பல மடங்கு மேல்தான் மதிப்பெண் மட்டுமே இலக்காக வைத்து பிராய்லர் கோழிகளை நாம் உருவாக்கவில்லை நமது அரசுப்பள்ளியில் படித்த செல்வங்கள் எல்லாம் தனக்கான வாழ்வை தன்னியல்பாக  அமைத்துக் கொள்வார்கள் பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? வாட்ஸ்ஆப் வழி இதனை படிக்கும் போது நிச்சயம் உண்மை எனவே பட்டது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்

1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம் 2. திருநெல்வேலி – 94.76 சதவீதம் 3. தூத்துக்குடி – 95.47 சதவீதம் 4. ராமநாதபுரம் – 95.04 சதவீதம் 5. சிவகங்கை – 95.07 சதவீதம் 6. விருதுநகர் – 95.73 சதவீதம் 7. தேனி – 95.11 சதவீதம் 8. மதுரை – 93.19 சதவீதம் 9. திண்டுக்கல் – 90.48 சதவீதம் 10. ஊட்டி – 91.29 சதவீதம் 11. திருப்பூர் – 95.2 சதவீதம் 12. கோவை – 94.15 சதவீதம் 13. ஈரோடு – 96.92 சதவீதம் 14. சேலம் – 90.90 சதவீதம் 15. நாமக்கல் – 94.37 சதவீதம் 16. கிருஷ்ணகிரி – 85.99 சதவீதம் 17. தர்மபுரி – 90.42 சதவீதம் 18. புதுக்கோட்டை – 93.01 சதவீதம் 19. கரூர் – 93.52 சதவீதம் 20. அரியலூர் – 90.53 சதவீதம் ... Read more

13 வகை சாபங்கள்

  • Categories: சமயம்
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!.. 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். 2) பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ... Read more

அடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

கனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல் பூர்வமானதாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி அநியாயத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ற பெயரில் சும்மா திரிப்பதை போலத்தான் இதைப் பார்க்கையில் தோன்றுகிறது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள் ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் விஜயகாந்த் போட்டியிடுகிறார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவுக்கு 22.5 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 38.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக – ம.ந.கூட்டணிக்கு 26.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. பாமக 5.5 சதவீத ... Read more

பேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே

இணையத்திலும் பொது வெளியிலும் தேர்தல் களத்திலும் இன்றைய பேசு பொருள் கஸ்தூரி பாட்டிதான். இவர்தான் அதிமுக, திமுக இரண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…!’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார். ஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள். இன்னும் சிலரோ.. ‘அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன?’ என்று ஆதரிக்கிறார்கள். சரி, இந்தப் பாட்டி எப்படி இரண்டு விளம்பரங்களிலும் ... Read more