சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம், சச்சின் சதமடித்து இந்திய அணி வெற்றி பெறும் முதல் போட்டி என்று அதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்த பெருமை எல்லாம் நம்ம ஊர் சென்னையில் தான் நடந்தது. இதனால் தான் சென்னையை சச்சினுக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது, பின்னரும் பல வேளைகளில் இங்கு சச்சின் நன்றாக விளையாடி அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

சதம் #5

ரன்கள் : 165
எதிரணி : இங்கிலாந்து
இடம் : சென்னை,இந்தியா
நாள் :  பெப்ரவரி 12,1993
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணம் இந்திய வீரர்களின் திறமையான ஆட்டம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. இங்கிலாந்து வீரர்கள் அதிகப்படியாக சாப்பிட்ட இறால் மீனும் தான். போட்டிக்கு முந்தைய நாள் சாப்பிட்ட இறால் போட்டியின் முதல் நாள் அணித் தலைவர் கிரகாம் கூச் வயிற்று உபாதைகளால் விலகிக் கொள்ள காரணமானது. அடுத்த நாள் மேலும் இரண்டு வீரர்கள் அவதியுடன் விளையாடினர். அதேர்டன் கேப்டன் ஆனார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாளில் இருந்தே இந்தியா போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சித்து சதம் அடித்து அசத்த அணியின் ஸ்கோர் 250 ஐ தாண்டியது. ஆனால் சச்சினின் நல்ல அனுபவ வீரரைப் போன்ற ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. சில பந்துகளை அடித்து விளாசுவதும், சில பந்துகளை அப்படியே விடுவது என தான் எந்த நிலைமையில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவரானர் சச்சின்.

முதல் நாள் ஆட்டம் முடியும் போது சதம் அடித்திருந்த சித்துவும் சச்சினும் களத்தில் இருந்தனர்.ஆனால் இந்த இணையை அடுத்த நாள் சீக்கிரமே இங்கிலாந்து வீரர்கள் பிரித்து விட்டனர். பின்னர் சச்சினோடு அம்ரே சேர்ந்து அணிக்கு நல்ல ஸ்கோர்-ஐ தொட உதவியாய் இருந்தனர்.

இந்த போட்டியில் எப்போதெல்லாம் பந்து ஸ்டம்பை விட்டு விலகி சச்சினுக்கு போடப்பட்டதோ(Wide outside the off stump) அப்போதெல்லாம் அவர் அதை பவுண்டரிக்கு துரத்தினார். மல்கோம் அப்படி என்ன செய்தார் என்று தெரியவில்லை அவர் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளுவதிலியே சச்சின் குறியாய் இருந்தார். சச்சின் 90 ஐ தொட்ட பின்பு அவர் பந்து வீச வந்தார். சில பந்துகளிலேயே் அடுத்தடுத்து மூன்று ஸ்ட்ரைட் ஆன் டிரைவ் அடித்து சதத்தை கடந்தார் சச்சின்.

சில வேளைகளில் லெக் சைடில் வீசப்பட்ட பந்துகளை கொஞ்சம் பின் நகர்ந்து விளையாடிய லெக் க்லான்ஸ் இன்னும் கண்ணிற்குள் நிற்கிறது. 150 ஐ கடந்ததும் அதிரடி ஆக ஆடத் தொடக்கி ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த பதிளியே அவர் பந்து வீச்சளாரிடமே பிடி கொடுத்து அவுட் ஆனார்.

கடைசியில் கபில் தேவின் அதிரடி உதவியுடன் இந்திய இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை பதித்தது(560).அடுத்து ஆடிய இங்கிலாந்து இரண்டு இன்னிங்க்ஸ்-லும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மொத்தம் வீழ்த்தப்பட்ட 20 விக்கெட்டுகளில் 17 சுழல் பந்துவீச்சாளர்களுக்குத் தான்.

அதிலும் இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் கும்ப்ளே மட்டும் ஆறு விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Cricinfo ஆட்ட விவரம்

காணொளி : 

                             

பதிவு பிடித்திருந்தால் தொடர்வதற்கு வாக்களியுங்கள்… 

0 Shares:
2 comments
Leave a Reply
You May Also Like
Read More

99 நாட் அவுட்.! (5)

ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில்…
Read More

99 நாட் அவுட்.! (3)

பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும்…
Read More

99 நாட் அவுட்.! (2)

நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம். இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம். நம்ம…
Read More

99 நாட் அவுட்.! (7)

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமாக ஒரு இடத்தை கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சில மாதங்களில் பெற்று விட்டார். ஆனால் ஒரு தின போட்டிகளை பொறுத்தவரை…
Read More

சச்சினுக்கு இன்னொரு மகுடம்..!

கடந்த ஓராண்டில் சச்சின் தன் 20 வருட கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட்டார். ஒரு தின போட்டிகளில் கனவாக இருந்த 200 ரன்களை…
Read More

99 நாட் அவுட் (6)

சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்.. இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது…