நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம்.
இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம்.

நம்ம இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பிட்சுகள் எல்லாமே சுழலுக்கு சாதகமானவை. வேகப் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது.ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ளவை வேகப் பந்துவீச்சுக்கு மிக நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. அதனாலேயே மிரட்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் அங்கிருந்து உருவாகி இருக்கின்றனர்.

1992 ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியா சென்றது நம் அணி. நான்கு போட்டிகளில் தோல்வி, ஒன்றில் மட்டுமே டிரா என சோகமாகவே இந்த தொடர் அமைந்தது.

சதம் #2

ரன்கள் : 148
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : சிட்னி,ஆஸ்திரேலியா
நாள் :  ஜனவரி 6,1992
ஆட்ட முடிவு : டிரா

இந்தியா அந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்த ஒரே போட்டி இது தான். நான்கு வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கியது இந்திய அணி, ஒரு வேளை நல்ல ஸ்பின்னர் ஒருவர் இருந்திருந்தால் கடைசி நாளில் நன்றாக பந்து திரும்பிய இந்த போட்டியை இந்தியா வசம் கொண்டு வந்திருக்க முடியும்.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இந்திய அணியில் ரவி சாஸ்திரியின் அற்புதமான இரட்டை சதத்தால் இந்தியா வலுவான நிலையில் இருந்தது.

சச்சின் தனது இரண்டாவது சதத்தை இந்த போட்டியில் தான் பதிவு செய்தார். அவர் ரவி சாஸ்திரி உடன் சேர்ந்து 196 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் தான் கிரிக்கெட் உலகின் சிறந்த எதிராளிகள்(விளையாடும் போது தான்) சச்சினும் வார்னேவும் முதன் முதலாக சந்தித்து கொண்டனர். இந்த போட்டி தான் ஷேன் வார்னேவின் முதல் சர்வதேச போட்டி ஆகும்.

சச்சின் தான் சந்தித்த 213 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 148 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இதில் அவரது அனாயாசமான பவுண்டரிகளுக்கு ஆஸ்திரேலியர்களும் ரசிகராயினர். சச்சின் இந்த சதம் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆனால் கடைசி நாளன்று ஆஸ்திரேலிய அணியின் எட்டு விக்கெட்டுகளை எடுத்த இந்திய அணியில் நல்ல ஸ்பின்னர் இல்லாதது குறையாக போய் விட்டது. இல்லையேல் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. சச்சினும் ஒரு ஓவர் கடைசியில் பந்து வீசி ஒரு விக்கெட் எடுத்து அதனை நிரூபித்து இருந்தார்.

காணொளி :

                      

சதம் #3

ரன்கள் : 114
எதிரணி : ஆஸ்திரேலியா
இடம் : பெர்த்,ஆஸ்திரேலியா
நாள் :  பெப்ரவரி 3,1992
ஆட்ட முடிவு : தோல்வி

ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று விட்டிருந்த நிலையில் ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்று களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 346 ரன்கள் எடுத்தது, ஸ்ரீகாந்த் ஐந்து கேட்சுகள் பிடித்து அசத்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸ் ஐ ஆடத் தொடங்கிய இந்திய அணியில் ஸ்ரீகாந்த் தாம் தூம் தொடக்கம் அளித்தாலும், அதற்கு பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்த வீதம் சீரான இடைவெளி என்று கூட சொல்ல முடியாது குறைந்த இடைவெளி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சச்சின் மட்டும் தனி ஆளாக ஒரு பக்கம் ஆஸ்திரேலிய வகத்தை சமாளித்து கொண்டிருக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கத் தொடங்கினர். ஆனால் கடைசியில் கிரண் மோரே கம்பெனி கொடுக்க சச்சின் கொஞ்ச நேரம் ஆஸ்திரேலிய பந்துகளை சிதறடித்தார்.

போட்டியில் மொத்தம் 16 பவுண்டரிகள் அடித்தார் சச்சின், அதில் பெரும்பான்மையானவை ஸ்கொயர் கட் ஆகும்.இதற்காக ரிச்சி பேனாட் போட்டி முடிந்ததும் சச்சினை வெகுவாக பாராட்டி இருந்தார். பார்ட்னர்ஷிப் அமையாமல் கஷ்டப்பட்ட சச்சின் தனது இரண்டாவது ஐம்பது ரன்களை 55 பந்துக்கெல்லாம் அடித்தார்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததும் களமிறங்கிய சச்சின் ஒன்பதாவது விக்கெட்டாகத் தான் ஆட்டம் இழந்தார்.இரண்டாவது இன்னிங்க்ஸ்-ல் மோசமான ஆட்டத்தால் இந்திய தோல்வி அடைந்தது ( சச்சினும் 5 ரன்கள் தான் அடித்தார்).

சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்று விடுகிறது என்று பேசுபவர்கள் கவனிக்க : சச்சின் அடித்த 114 ரன்களுக்கு அடுத்து இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் 43 அதுவும் பத்தாவது ஆட்டக்காரராக விளையாடிய கிரண் மோரே உடையது. இப்படி இருந்தால் எப்படி வெற்றி பெற முடியும்?

காணொளி :

                    

முழு காணொளி இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்..

நாளை : சென்னையை சச்சினுக்கு ரொம்ப பிடிக்கக் காரணம்??

பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து பலரையும் சேர உதவுங்கள்…
  

0 Shares:
2 comments
  1. உங்களது இந்த தொடர் பதிவு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
    சச்சின் சதம் அடித்த போட்டிகளின் முழுமையான ஸ்கோர் க்கான லிங்குகளையும் பதிவில் குறிப்பிடவும்.

  2. உங்களது இந்த தொடர் பதிவு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
    சச்சின் சதம் அடித்த போட்டிகளின் முழுமையான ஸ்கோர் க்கான லிங்குகளையும் பதிவில் குறிப்பிடவும்.

Leave a Reply
You May Also Like
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

புனே சென்னை ஆகுமா?

புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு…