இன்னும் 10 ஆண்டுகளில் செயற்கை மூளை!

0
29
இன்னும் 10 ஆண்டுகளில் செயற்கை மனித மூளையைத் தயாரிக்க இயலும் என அறிவியலார்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டில் நடைபெற்று வரும் டெட் மாநாட்டில் பேசிய பேராசிரியர் ஹென்றி மார்க்கம் தெரிவித்துள்ளார். இந்த செயற்கை மூளை மூளைக் கோளாறுகளில் அவதிப் படுவோருக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கெனவே நீல மூளைப் புறத்தீ்டு (Blue Brain Project) என்ற பெயரில் ஓர் அமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு எலிகளின் மூளை செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து அதனை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து நியூரான்களின் செயல்பாட்டைக் கணித மாதிரியாக வடிவமைத்து வெற்றி கண்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் போது, மனிதனுக்கு மாபெரும் புதிராக விளங்கும் மனித மூளை போலச் செயற்கை மூளை வடிவமைக்க இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரியவந்தது.

செரிப்ரல் கார்ட்டெக்சை வடிவமைக்கும் பணியில் தற்போது இக்குழு ஈடுபட்டுவருகிறது. இதற்காக ஐபிஎம்மின் புளூஜீன் அதிவிரைவுக் கணினியை இந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

பகிர்ந்து
முந்தைய செய்திகொஞ்சம் அரசியல்…
அடுத்த செய்திஉலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க