ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் Jaya-karuபெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக, இருவரும் தங்களது வேட்புமனுவில் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா தேவியிடம் தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவுடன் தனது சொத்து பற்றிய விபரங்களை ஜெயலலிதா இணைத்துள்ளார்.
இதன்படி,
ஜெ.,வுக்கு ரூ118.58 கோடி சொத்து உள்ளது. ரூ.41.63 கோடி அளவுக்கு அசையும் சொத்துக்களும்,
ரூ.76.95 கோடி அளவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ரூ.2.04 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு சொத்தே இல்லையாம்

தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு, துணைவி ராசாத்தி ஆகியோர் பெயரில் ரூ.62.99 கோடி சொத்து உள்ளது
இதன்படி தயாளு, ராசாத்தி ஆகியோர் பெயர்களில் ரூ.58.77 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லை எனவும், தயாளு மற்றும் ராசாத்தி பெயர்களில் ரூ. 4.63 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. தவிர ராசாத்தி பெயரில் ரூ.11.94 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும், கருணாநிதி பெயரில் கார், வேளாண், வங்கிக்கடன் ஏதும் இல்லை. இவ்வாறு கருணாநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

0 Shares:
Like 0
Tweet 0
Pin it 0
Leave a Reply Cancel reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

சின்ன டிவி கொடுத்து ஏமாற்றியது யார்? – ஜெயலலிதா பிரச்சாரம்

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற…
Read More

விஜயகாந்தை கட்சியில் நீக்க திட்டமா? – சந்திரகுமார் டீம் ஆலோசனை

சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர் சந்திரகுமார் அணியினர். சட்டசபை…