அடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

0
498

கனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல் பூர்வமானதாக கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி அநியாயத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ற பெயரில் சும்மா திரிப்பதை போலத்தான் இதைப் பார்க்கையில் தோன்றுகிறது.

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடையும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவுக்கு 22.5 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 38.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

தேமுதிக – ம.ந.கூட்டணிக்கு 26.6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 2வது இடமே கிடைத்துள்ளது. பாமக 5.5 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2006 தேர்தலில் விருத்தாசலத்திலும், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அதேபோல், இந்த முறையும் ரிஷிவந்தியத்தில் தோல்வி அடையும் நிலை இருந்ததாலே அவர், உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தாக கூறப்படுகிறுது.

இந்நிலையில் நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தினமலர் கருத்துக்கணிப்பில் விஜயகாந்த் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றது.

உங்கள் கருத்தை தெரிவிக்க