ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹெல்மட் அணிவது. தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டுமென்ற சட்டமும் உள்ளது.

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க…

ஹெல்மட்டை நீண்ட நேரம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையிழப்பதோடு, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை இழந்து, அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

எனவே முடி உதிர்வதைத் தடுக்க நாம் ஏதேனும் ஒரு துணியை தலையில் கட்டிக் கொண்டு பின் ஹெல்மட் அணிவோம்.

கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க…

இருப்பினும் இது மட்டும் போதாது. ஒருசில பராமரிப்புக்களையும் தலைமுடிக்கு கொடுக்க வேண்டியது அவசியம். இங்கு ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Source: tamil.boldsky.com

எலுமிச்சை ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் பொருள். எனவே வாரத்திற்கு 1 முறை எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை அலசி, நன்கு உலர வைத்து, பின் ஸ்கால்ப்பில் எண்ணெய் தடவ வேண்டும். இப்படி செய்வதால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்கும்.

நீண்ட நேரம் ஹெல்மட் அணிவதால் தலைமுடி பொலிவிழக்க ஆரம்பிக்கும். எனவே முடியின் பொலிவை அதிகரிக்க ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் தலைமுடியை அலசுங்கள். இதன் மூலம் தலைமுடியின் பொலிவு அதிகரிப்பதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பாதாம் எண்ணெய் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலச, அதில் உள்ள வைட்டமின் ஈ தலைமுடியின் மென்மை, வலிமை மற்றும் பொலிவு அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல் கூட தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலசி, உலர வைக்க வேண்டும். இந்த முறையை மேற்கொள்ளும் போது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்முறையை வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

வாரம் ஒருமுறை பூண்டினை தேங்காய் அல்லது நல்லெண்ணெயில் தட்டிப் போட்டு சூடேற்றி, பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசி வர, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, முடியின் வலிமையும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு சூடேற்றி இறக்கி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை வடிகட்டி அதனைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச தலையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முடியின் வலிமை அதிகரித்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…
Read More

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…

அச்சச்சோ கருவளையமா,இத படிங்க

கண்ணை சுற்றி கருவளையம் வர காரணம் என்னவாக இருக்கும்? தூக்கமின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,சிகிரெட்,குடிப்பழக்கம்,வயது முதிர்ச்சி, மன உலைச்சல் ,மாதவிடாய் தொடர்ச்சியின்மை,நாள் முழுக்க லைட் வெளிச்சத்தில்…
Read More

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம்?

அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக…