விஜயகாந்த் தொகுதிகளில் ஒளிந்திருக்கும் இரகசியம்

0
325

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார்.

விருதாசலத்தில் விஜயகாந்த் போட்டியிட காரணம், அந்த தொகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூலவர் பெயர், ‘விருதகிரி’ என்பதாகும்.

2011 தேர்தலில், அதிமுகவோடு கூட்டணி வைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். இதற்கு காரணம், ஷிவந்தியத்தில் உள்ள சிவன் பெயர், ‘அர்த்தநாரி’ என்பதாகும்.

காரணம்

‘ரி’ என்ற எழுத்தில் முடியும் சிவன் கோவில் உள்ள தொகுதியை தான் தேர்ந்தெடுத்து வருவதாக, ஒருமுறை, விஜயகாந்த், மணலுார்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது விளக்கம் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் சென்டிமென்ட்டுக்கு கைமேல் பலன் கிடைத்து, அவர், நிழல் முதல்வர் என்று அழைக்கப்படும், எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கிராம அர்த்தநாரி

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள எலவனாசூர்கோட்டை என்ற கிராமத்தில், ‘கிராம அர்த்தநாரி’ என்ற பெயருடன், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதுவும் ‘ரி’ என்ற எழுத்தில் நிறைவடையும் சிவன் கோயில் என்பதால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளாராம்.