வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் – பாகம் 2: உறுதி செய்தது லைகா!

0
80

வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது. லைகா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: வெள்ளைக் கொடிக்கு மீண்டும் வேலை வந்துவிட்டதா? எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து பாகம் 2-ஐ தயாரிக்க உள்ளன. நல்ல பொழுதுபோக்கு உறுதி என்று வடிவேலுவின் இம்சை அரசன் படப் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க