மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதால் தான், சென்னையில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ஆய்வு குழு அறிக்கை தாக்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் இது மறுத்திருக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன், அந்த அறிக்கையில் தமிழகம் மெதுவாக செயல்பட்டதாக குறிப்பிடவில்லை, என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2-ந் தேதி ‘எக்கனாமிக் டைம்ஸ்‘ நாளேட்டில், ‘‘வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு மெதுவாக செயல்பட்டது – மத்திய அறிக்கை கூறுகிறது’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தகவலின் உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல், அந்த செய்தியை பிற மீடியாக்களும் வெளியிட்டுள்ளன.
அந்த பத்திரிகையின் கட்டுரையில், “மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில், வெள்ள பாதிப்புக்கு அதிகமாக பெய்த மழை மட்டுமே காரணம் இல்லை, மோசமான கழிவுநீர் அகற்றல் முறையும், நீர்த் தேக்கங்களில் இருந்து கூடுதலாக நீரை வெளியேற்றியதும் காரணமாகும்” என்று கூறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், “குஜராத், ஒடிசா மாநிலங்களை போன்று விரைவாக தமிழ்நாடு செயல்பட்டு இருந்தால் பேரிழப்பை தவிர்த்திருக்க முடியும்” என்றும் கூறியுள்ளதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘‘ஒரு நீர்த்தேக்கம் திறப்பின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தை வெளியேற்றும் அளவில் சென்னையில் கழிவுநீர் அகற்றல் முறைகள் வலுவாக இருக்கவில்லை’’ என்று கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
‘எக்கனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரை அடிப்படை ஆதாரமற்றது; தவறானது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்து அந்த அமைச்சகத்திடம் இருந்து 3-ந் தேதி கடிதம் வந்துள்ளது.
அதில், அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதுபோல், “மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் எந்த அறிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் வந்த தகவல் எதையும் அமைச்சகம் தங்கள் கருத்தாக ஏற்கவும் இல்லை.
கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்ட என்னுடைய அறிக்கையில் விரிவாக கூறி உள்ளேன். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளம் அரிதிலும், அரிதான இயற்கை பேரிடராகும். மாறாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றும் மேலாண்மையில் ஏற்பட்ட குறைபாடு காரணம் அல்ல. இதில் எந்த குறையும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளேன்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையில், தமிழக அரசு எடுத்த மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு, மறுகுடியமர்வு போன்ற பணிகள் பரவலான பாராட்டை பெற்றன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்த எந்த அறிக்கையும் இந்த அமைச்சகம் தயார் செய்யவில்லை. அந்த பத்திரிகை நிருபர் தெரிவித்துள்ள அனுமானங்கள் அனைத்தையும் அமைச்சகம் மறுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…