Madurai_Meenakshi1

 

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை சுமார் 10 ஆயிரம் பேர் நேரில் கண்டு இறைவன்-இறைவியை தரிசித்தனர்.உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.

இன்று அதிகாலை வெள்ளிச் சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளி, முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின் திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பாடாகினர்.மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாள், அருள்மிகு சுப்பிரமணியசாமி, தெய்வானை ஆகியோர் எழுந்தருளினர்.முன்னதாக திங்கள்கிழமை இரவு இந்திர விமானத்தில் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் எழுந்தருளினர். சுவாமி, அம்மன், கிழக்கு, வடக்கு மாசி வீதிச் சந்திப்பில் லாலாஸ்ரீ ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் இரவு எழுந்தருளினர்.அங்கு சுவாமி தேரில் சிறுவன் சிவகணேஷ் சிவன் வேடத்திலும், சிறுமி முத்துபாண்டி மீனாட்சி வேடத்திலும் இருந்து வில்லில் நாண் எய்து போர் புரிவது போன்ற பூஜைகள் நடைபெற்றன.

பின் சுந்தரேசுவரரிடம் மீனாட்சி அன்பு கொண்டு திருமணத்துக்கு சம்மதிப்பதற்கான பூஜையும் நடைபெற்றது. அதன்பின் மீனாட்சியம்மனுக்கு பக்தர்கள் சீர்வரிசையை வைத்து சுமந்து சென்றனர்.திருக்கல்யாணத்துக்கு பின் இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமி, பிரியாவிடையும் மாசி வீதிகளில் எழுந்தருள்கின்றனர். புதன்கிழமை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.விருந்து: திருக்கல்யாணத்துக்கு வந்த பக்தர்களுக்காக வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் மஞ்சள், குங்குமம், கயிறு கொண்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

பாகுபலி-2

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…