மக்கள் சேவை போட்டிக்கு 3785 பேர் தெரிவு

0
165

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 321 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள். 3 ஆயிரத்து 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 339 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேர் களத்தில் உள்ளனர். மிகக் குறைந்த அளவாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 24, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் 25, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில் 10, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கத்தில் 20, பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரத்தில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் பிரச்சாரம் மே 14-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. மே 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொகுதி எண் தொகுதி பெயர் மாவட்டம் போட்டியிடும் வேட்பாளர்கள்
1 கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் 15
2 பொன்னேரி திருவள்ளூர் 14
3 திருத்தணி திருவள்ளூர் 15
4 திருவள்ளூர் திருவள்ளூர் 21
5 பூந்தமல்லி திருவள்ளூர் 14
6 ஆவடி திருவள்ளூர் 21
7 மதுரவாயல் திருவள்ளூர் 14
8 அம்பத்தூர் திருவள்ளூர் 27
9 மாதவரம் திருவள்ளூர் 15
10 திருவொற்றியூர் திருவள்ளூர் 21
11 ராதாகிருஷ்ணன் நகர் திருவள்ளூர் 45
12 பெரம்பூர் சென்னை 33
13 கொளத்தூர் சென்னை 24
14 வில்லிவாக்கம் சென்னை 17
15 திரு.வி.க நகர் சென்னை 22
16 எழும்பூர் சென்னை 21
17 இராயபுரம் சென்னை 17
18 துறைமுகம் சென்னை 25
19 சேப்பாக்கம் சென்னை 20
20 ஆயிரம் விளக்கு சென்னை 22
21 அண்ணா நகர் சென்னை 21
22 விருகம்பாக்கம் சென்னை 20
23 சைதாப்பேட்டை சென்னை 22
24 தியாகராய நகர் சென்னை 19
25 மயிலாப்பூர் சென்னை 25
26 வேளச்சேரி காஞ்சிபுரம் 25
27 சோளிங்கநல்லூர் காஞ்சிபுரம் 15
28 ஆலந்தூர் காஞ்சிபுரம் 13
29 திருப்பெரும்புதூர் காஞ்சிபுரம் 15
30 பல்லாவரம் காஞ்சிபுரம் 15
31 தாம்பரம் காஞ்சிபுரம் 20
32 செங்கல்பட்டு காஞ்சிபுரம் 17
33 திருப்போரூர் காஞ்சிபுரம் 12
34 செய்யூர் காஞ்சிபுரம் 13
35 மதுராந்தகம் காஞ்சிபுரம் 11
36 உத்திரமேரூர் காஞ்சிபுரம் 15
37 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 15
38 அரக்கோணம் வேலூர் 13
39 சோளிங்கர் வேலூர் 18
40 காட்பாடி வேலூர் 15
41 ராணிப்பேட்டை வேலூர் 13
42 ஆற்காடு வேலூர் 8
43 வேலூர் வேலூர் 22
44 அணைக்கட்டு வேலூர் 24
45 கீழ்வைத்தனன் குப்பம் வேலூர் 12
46 குடியாத்தம் வேலூர் 15
47 வாணியம்பாடி வேலூர் 14
48 ஆம்பூர் வேலூர் 15
49 ஜோலார்பேட்டை வேலூர் 12
50 திருப்பத்தூர் வேலூர் 17
51 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி 11
52 பர்கூர் கிருஷ்ணகிரி 15
53 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 19
54 வேப்பனஹள்ளி கிருஷ்ணகிரி 18
55 ஓசூர் கிருஷ்ணகிரி 20
56 தளி கிருஷ்ணகிரி 11
57 பாலக்கோடு தர்மபுரி 15
58 பென்னாகரம் தர்மபுரி 15
59 தர்மபுரி தர்மபுரி 15
60 பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி 14
61 அரூர் தர்மபுரி 13
62 செங்கம் திருவண்ணாமலை 15
63 திருவண்ணாமலை திருவண்ணாமலை 21
64 கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை 18
65 கலசப்பாக்கம் திருவண்ணாமலை 18
66 போளூர் திருவண்ணாமலை 18
67 ஆரணி திருவண்ணாமலை 22
68 செய்யாறு திருவண்ணாமலை 15
69 வந்தவாசி திருவண்ணாமலை 12
70 செஞ்சி விழுப்புரம் 14
71 மயிலம் விழுப்புரம் 12
72 திண்டிவனம் விழுப்புரம் 11
73 வானூர் விழுப்புரம் 9
74 விழுப்புரம் விழுப்புரம் 24
75 விக்கிரவாண்டி விழுப்புரம் 17
76 திருக்கோயிலூர் விழுப்புரம் 14
77 உளுந்தூர்ப்பேட்டை விழுப்புரம் 25
78 இரிஷிவந்தியம் விழுப்புரம் 19
79 சங்கராபுரம் விழுப்புரம் 18
80 கள்ளக்குறிச்சி விழுப்புரம் 12
81 கங்கவள்ளி சேலம் 15
82 ஆத்தூர் – சேலம் சேலம் 14
83 ஏற்காடு சேலம் 13
84 ஓமலூர் சேலம் 19
85 மேட்டூர் சேலம் 30
86 எடப்பாடி சேலம் 15
87 சங்ககிரி சேலம் 15
88 சேலம்-மேற்கு சேலம் 19
89 சேலம்-வடக்கு சேலம் 23
90 சேலம்-தெற்கு சேலம் 19
91 வீரபாண்டி சேலம் 15
92 இராசிபுரம் நாமக்கல் 12
93 சேந்தமங்கலம் நாமக்கல் 10
94 நாமக்கல் நாமக்கல் 15
95 பரமத்தி-வேலூர் நாமக்கல் 19
96 திருச்செங்கோடு நாமக்கல் 24
97 குமாரபாளையம் நாமக்கல் 25
98 ஈரோடு கிழக்கு ஈரோடு 14
99 ஈரோடு மேற்கு ஈரோடு 16
100 மொடக்குறிச்சி ஈரோடு 13
101 பெருந்துறை ஈரோடு 14
102 பவானி ஈரோடு 15
103 அந்தியூர் ஈரோடு 21
104 கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு 15
105 பவானிசாகர் ஈரோடு 17
106 தாராபுரம் திருப்பூர் 14
107 காங்கேயம் திருப்பூர் 13
108 அவினாசி திருப்பூர் 10
109 திருப்பூர் வடக்கு திருப்பூர் 8
110 திருப்பூர் தெற்கு திருப்பூர் 13
111 பல்லடம் திருப்பூர் 17
112 உடுமலைப்பேட்டை திருப்பூர் 15
113 மடத்துக்குளம் திருப்பூர் 18
114 உதகமண்டலம் நீலகிரி மாவட்டம் 19
115 கூடலூர் நீலகிரி மாவட்டம் 12
116 குன்னூர் நீலகிரி மாவட்டம் 12
117 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் 21
118 சூலூர் கோயம்புத்தூர் 16
119 கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர் 17
120 கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் 19
121 தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர் 17
122 கோயம்புத்தூர் தெற்கு கோயம்புத்தூர் 13
123 சிங்காநல்லூர் கோயம்புத்தூர் 15
124 கிணத்துக்கடவு கோயம்புத்தூர் 9
125 பொள்ளாச்சி கோயம்புத்தூர் 9
126 வால்பாறை கோயம்புத்தூர் 14
127 பழநி திண்டுக்கல் 23
128 ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் 15
129 ஆத்தூர் – திண்டுக்கல் திண்டுக்கல் 19
130 நிலக்கோட்டை திண்டுக்கல் 14
131 நத்தம் திண்டுக்கல் 19
132 திண்டுக்கல் திண்டுக்கல் 15
133 வேடசந்தூர் திண்டுக்கல் 15
134 அரவக்குறிச்சி கரூர் 36
135 கரூர் கரூர் 22
136 கிருஷ்ணராயபுரம் கரூர் 14
137 குளித்தலை கரூர் 13
138 மணப்பாறை திருச்சிராப்பள்ளி 13
139 ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி 15
140 திருச்சிராப்பள்ளி மேற்கு திருச்சிராப்பள்ளி 15
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு திருச்சிராப்பள்ளி 15
142 திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி 21
143 இலால்குடி திருச்சிராப்பள்ளி 15
144 மண்ணச்சநல்லூர் திருச்சிராப்பள்ளி 19
145 முசிறி திருச்சிராப்பள்ளி 20
146 துறையூர் திருச்சிராப்பள்ளி 13
147 பெரம்பலூர் பெரம்பலூர் 13
148 குன்னம் பெரம்பலூர் 14
149 அரியலூர் அரியலூர் 14
150 ஜெயங்கொண்டம் அரியலூர் 14
151 திட்டக்குடி கடலூர் 15
152 விருத்தாச்சலம் கடலூர் 14
153 நெய்வேலி கடலூர் 11
154 பண்ருட்டி கடலூர் 13
155 கடலூர் கடலூர் 14
156 குறிஞ்சிப்பாடி கடலூர் 14
157 புவனகிரி கடலூர் 17
158 சிதம்பரம் கடலூர் 13
159 காட்டுமன்னார்கோயில் கடலூர் 10
160 சீர்காழி நாகப்பட்டினம் 12
161 மயிலாடுதுறை நாகப்பட்டினம் 8
162 பூம்புகார் நாகப்பட்டினம் 10
163 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 19
164 கீழ்வேளூர் நாகப்பட்டினம் 9
165 வேதாரண்யம் நாகப்பட்டினம் 11
166 திருத்துறைப்பூண்டி திருவாரூர் 11
167 மன்னார்குடி திருவாரூர் 12
168 திருவாரூர் திருவாரூர் 15
169 நன்னிலம் திருவாரூர் 14
170 திருவிடைமருதூர் தஞ்சாவூர் 11
171 கும்பகோணம் தஞ்சாவூர் 14
172 பாபநாசம் தஞ்சாவூர் 14
173 திருவையாறு தஞ்சாவூர் 9
174 தஞ்சாவூர் தஞ்சாவூர் 12
175 ஒரத்தநாடு தஞ்சாவூர் 12
176 பட்டுக்கோட்டை தஞ்சாவூர் 10
177 பேராவூரணி தஞ்சாவூர் 9
178 கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை 11
179 விராலிமலை புதுக்கோட்டை 15
180 புதுக்கோட்டை புதுக்கோட்டை 17
181 திருமயம் புதுக்கோட்டை 12
182 ஆலங்குடி புதுக்கோட்டை 11
183 அறந்தாங்கி புதுக்கோட்டை 19
184 காரைக்குடி சிவகங்கை 15
185 திருப்பத்தூர், சிவகங்கை சிவகங்கை 18
186 சிவகங்கை சிவகங்கை 16
187 மானாமதுரை சிவகங்கை 12
188 மேலூர் மதுரை 20
189 மதுரை கிழக்கு மதுரை 19
190 சோழவந்தான் மதுரை 14
191 மதுரை வடக்கு மதுரை 21
192 மதுரை தெற்கு மதுரை 12
193 மதுரை மத்தி மதுரை 19
194 மதுரை மேற்கு மதுரை 20
195 திருப்பரங்குன்றம் மதுரை 20
196 திருமங்கலம் மதுரை 22
197 உசிலம்பட்டி மதுரை 15
198 ஆண்டிப்பட்டி தேனி-அல்லிநகரம் 19
199 பெரியகுளம் தேனி-அல்லிநகரம் 19
200 போடிநாயக்கனூர் தேனி-அல்லிநகரம் 23
201 கம்பம் தேனி-அல்லிநகரம் 19
202 இராஜபாளையம் விருதுநகர் 20
203 திருவில்லிபுத்தூர் விருதுநகர் 16
204 சாத்தூர் விருதுநகர் 19
205 சிவகாசி விருதுநகர் 25
206 விருதுநகர் விருதுநகர் 15
207 அருப்புக்கோட்டை விருதுநகர் 15
208 திருச்சுழி விருதுநகர் 18
209 பரமக்குடி இராமநாதபுரம் 15
210 திருவாடாணை இராமநாதபுரம் 21
211 இராமநாதபுரம் இராமநாதபுரம் 17
212 முதுகுளத்தூர் இராமநாதபுரம் 15
213 விளாத்திகுளம் தூத்துக்குடி 14
214 தூத்துக்குடி தூத்துக்குடி 13
215 திருச்செந்தூர் தூத்துக்குடி 13
216 ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி 21
217 ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி 12
218 கோவில்பட்டி திருநெல்வேலி 12
219 சங்கரன்கோவில் திருநெல்வேலி 15
220 வாசுதேவநல்லூர் திருநெல்வேலி 10
221 கடையநல்லூர் திருநெல்வேலி 15
222 தென்காசி திருநெல்வேலி 11
223 ஆலங்குளம் திருநெல்வேலி 12
224 திருநெல்வேலி திருநெல்வேலி 17
225 அம்பாசமுத்திரம் திருநெல்வேலி 19
226 பாளையங்கோட்டை திருநெல்வேலி 14
227 நாங்குநேரி திருநெல்வேலி 16
228 ராதாபுரம் திருநெல்வேலி 15
229 கன்னியாகுமரி கன்னியாகுமரி 15
230 நாகர்கோவில் கன்னியாகுமரி 19
231 குளச்சல் கன்னியாகுமரி 11
232 பத்மனாபபுரம் கன்னியாகுமரி 14
233 விளவங்கோடு கன்னியாகுமரி 18
234 கிள்ளியூர் கன்னியாகுமரி 14

 

மொத்தமாக சேர்த்து 3785 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

முழு விபரம் அறிய 

உங்கள் கருத்தை தெரிவிக்க