நாம் தமிழர் தேர்தல் அறிக்கை

0
260

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை யில் இயற்கைவழி விவசாயம் மட்டுமே தமிழகத்தில் என்று அறிவிப்பு ஏறுதழுவல் ஏழு நாள் அரசு விடுமுறையுடன் விவசாயம் அரசு வேலையாக அங்கீகரிக்கப்படும்

* மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்

* அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி

* அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்

* ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம்அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000

* 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி

* மெக்காலே கல்வி முறை ஒழிப்பு

* இயற்க்கை விவசாயத்திற்க்கு மட்டுமே அனுமதி

* ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை

* விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி

* பெருவணிக நிறுவனங்களுக்கு தடை

* தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி

* அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்

*10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்

*,சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்க்கையை பாதுக்கும் மரங்கள் நட்டப்படும்

* புதியதாக காடுகள் வளர்க்கப்படும்

* 1கோடி பனைமரங்கள் முதற்க்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்

* தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்

* கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்

* அந்நியர்கள் தொழில் தொடங்க தடை

* விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்

* தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடி நீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்

* தண்ணீர் விற்கத்தடை

* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க்க தடை

* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்

* கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்

* நகர் மயமாக்கல் தடுக்கப்படும்

* அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்

*அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது

*அணுஉலைகள் முற்றாக மூடப்படும்

* பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்

* வரதட்சணைக்கு தடை

* பூரண மதுவிலக்கு அமல்

* மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்

* எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்

* மீனவர் பாதுகாப்பு படை

* மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்

* திருக்குறள் தேசிய நூல் அறிவிக்கப்படும்…

* அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீடெடுத்து வளர்க்கப்படும்

* தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்

*தைப்பூசத்திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்

* காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக ,மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்

* கைய்யூட்டு வாங்கினால் உடனடுயாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

* கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்

* பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம்