ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது.

ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதியில் பயங்கர சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 130க்கும் அதிகமான முறை நில அதிர்வு உணரப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சாலைகளில் தங்கி வருகின்றனர்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

பாகுபலி-2

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…