தமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்?

0
431

வசந்தகுமார்

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

நாங்குநேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் நேற்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.332.27 கோடி மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் மற்றும் ரொக்கம், வங்கி இருப்பு, தங்க நகைகள் உள்ளதாகவும், வங்கிகளில் பெற்ற கடன் உள்பட ரூ.122.53 கோடி கடன் இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இவரை அடுத்து தமிழகத்தில் அதிக சொத்துள்ள வேட்பாளராக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

திரு. வசந்த குமார் , வசந்த் அண்ட் கோ என்னும் தொழில் நிறுவனத்தை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வசந்த் டிவி , புத்தகங்கள் என மீடியாவிலும் ஆர்வமிக்கவர் இவர்.  பல ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷன் அலைவரிசையில்  சாப்பிட வாங்க எனும் நிகழ்ச்சி மூலம் கிராமங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

உங்கள் கருத்தை தெரிவிக்க