கடந்த 2006 ஆம் ஆண்JAYAடு ஆட்சிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டார் என ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தமிழகத்தில் 1.08 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், திமுகவினர் எதுவுமே செய்யவில்லை என பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவினர் வாக்கு கேட்டு வரும்போது, இத்திட்டங்களை கூறி, அவர்களை விரட்டி அடியுங்கள்.

திமுக கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்களை நிறைவேற்றவில்லை. திமுக நிறைவேற்றிய ஒரே திட்டம் இலவச வண்ண தொலைகாட்சி திட்டம்தான்.

அதிலும் திமுக ஏமாற்றிவிட்டது. எல்லாரும் 21 இன்ஞ் டிவி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 இன்ஞ் டிவி மட்டுமே வழங்கப்பட்டது. அதேநேரத்தில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என கூறிய கருணாநிதி அதை நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தை அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, ரூ. 75 கட்டணத்தில் இணைப்பு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் இது 250 ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கேபிள் கட்டணம் குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவுமே குறிப்பிடவில்லை என்றார்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…
Read More

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…
Read More

ஓலா விளம்பரத்தில் நரேந்திர மோடி

முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள். சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார். இதை நாம்…
Read More

தேமுதிக தேர்தல் அறிக்கை

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் பகுதியை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: விவசாயம்: நம்மாழ்வார்…